பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது



213


மண் வழிப்பட்ட உடைமைகளிலும் உள்ளம் உடைமையே உடைமையென உணர்த்தப் பிறந்தது; ஆனதைக் கதையாக்கிக் கவலையாக்கிச் சாகாமல், தடுக்க ஆவது காட்டப் பிறந்தது. நிலத்தில் துய்மை, உடலில் துய்மை, நெற்றியில் தூய்மை இவையனைத்தும் கைகள் செய்பவை. இந்தத் துய்மை பெருகி வளர்ந்தும், பேணும் சமுதாயம் பகையினின்றும் விடுதலை பெற்றபாடில்லை. நன்செயலின் தோற்றமும் நஞ்சையிலில்லை; புன்செயலின் தோற்றமும் புஞ்சையிலில்லை. காழ்ப்பின் தோற்றம் காசுகளிலில்லை. கலகங்களின் தோற்றம் கடவுள்களிட்டதில்லை. கொலையுணர்வின் தோற்றம் கொடுவாளிடத்திலில்லை. உருக்குலைக்கும் உட்பகையின் தோற்றம் உடலின்கண் இல்லை, ஆங்கிலங்கும் நீற்றிலில்லை. பின் எங்கு? நஞ்சின் நிலைக்களம் மனமேயாம். மனத்துக் கறுப்பு வைத்து மாநிலம் முழுதும் தூய்மை செய்தாலும் பயனில்லை என்று பாங்குறக் காட்டி மனத்தின் கண் மாசறுத்து மகிழ்வூட்டப் பிறந்தது வள்ளுவம்.

மனிதன், உருவெளித் தோற்றத்தால் தனி மனிதன்; மக்கட் கணக்கெடுப்பில் தனி மனிதன், வயிற்றால் வாயால் தனி மனிதன், ஆயினும், அவன் படைத்திடும் வாழ்க்கை தனி மனித வாழ்க்கையன்று; சமுதாய வாழ்க்கை-கூட்டு வாழ்க்கை அவனிடத்தில் உருவாகித் தோன்றும் உணர்வுகள் உலகம் தந்த உணர்வுகளேயாம். ஈண்டு உலகம் என்பது மனித சாதியை நினைத்தேயாம். எனவே, இயற்கை உலகம், மனித சாதியினைப்போல எளிதில் ஒழுக்கங்களைக் கடப்பனவல்ல; முறைகளை மீறுவன அல்ல; நீதிகளை நீப்பன அல்ல. இயற்கை உலகில் மாற்றங்கள் உண்டு; ஆனால் ஏமாற்றங்கள் இல்லை. மனித சாதியிலோ முறைகளை எளிதில் கடந்த சிலச் சிதைவினையும், ஏமாற்றங்களையும் வரலாறுகளே படம் பிடித்துக் காட்டுகின்றன; இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. கீழே விழுந்துவிடாமல் தம்மை அடிக்கடி தூக்கி நிறுத்திக் கொண்ட மனிதசாதி கெட்டதைப் போல செடிகள் உலகம் கெடவில்லை. கொடிகள் உலகம் கெடவில்லை.