பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/240

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விலங்குகள் உலகமும் கெடவில்லை. ஆனால் மனிதனோ தம்பட்டம் அடித்துக்கொள்கிறான். விலங்குகளுக்கு ஐந்து அறிவாம். இவனுக்கு ஆறாவது அறிவாம் ஐயகோ, மனிதர்களே! வாயும் வார்த்தைகளும் கிடைத்தமையால் ஏன் இப்படி வையகத்தை ஏமாற்றுகிறீர்கள்? எங்கேயிருக்கிறது உங்கள் ஆறாம் அறிவு? நமக்கு அறிவு இருப்பதன் அடையாளம் என்ன? அதற்கு பதில் ஆரவாரம்தானோ? விலங்குகளும் துன்பம் அனுபவிக்கின்றன. ஆனால் ஓர் அதிசயம்! விலங்குகள் அனுபவிக்கும் துன்பங்கள் பெரும்பாலும் இயற்கை வழியில் வந்த துன்பங்கள். ஒரோவழி, அறிவின்மையின் காரணமாகச் சில அவலங்களையும் அடைகின்றன. ஆயினும் மனிதச் சாதியைப்போல செயற்கை இன்பங்களும் செயற்கைத்துன்பங்களும் விலங்கினத்திற்கு கிடையா! அறிவிருப்பதைக் காட்டுதற்குரிய அன்பு பிறந்திருக்கிறதா? "மேடையில் தான் பிறக்கிறது! வணிகம்தான் நடை பெறுகிறது!” என்று இடித்துக்கேட்க- “அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின் நோய் தந்நோய்போல் போற்றாக் கடை" என்று வள்ளுவம் பிறந்தது.

வாழ்க்கையென்பது, ஒன்றரையடியில் பிறந்து ஆறடிக்கு வளர்ந்து மண்ணுக்கு உரமாகவோ? நிலத்தில் விளைந்தவைகளைத் தின்று திரிந்து கதை முடிக்கவோ? உண்ட உணவின் கொழுப்புகளால் விளைந்த உடலெரிச்சலைக் கூடித் தணித்துக் கொள்ளவோ? இல்லை, இல்லை! மனிதன்-அவனே வையகத்தின் நாயகன்! கடவுளின் சாட்சியாக விளங்க வேண்டியவன்! அவன் வாழ்வாங்கு வாழ்ந்தால், வையகம் வளரும்; வானகம் மண்ணுக்கு வரும். அங்ஙனம் வாழ்தல் வாழ்க்கை என்று காட்ட, "வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!” என்று வள்ளுவம் பிறந்தது.

மண்ணுக்கு இயற்கையில் உயிர்ப்பாற்றல் இருக்கிறது. அந்த உயிர்ப்பாற்றலின் வழி இழுத்தெறியப் படாமல் மேலே உயர உயர ஓங்கி வளர, இயற்கை ஆற்றலும் தந்தது. விலங்குகளுக்குக் கால்களும், மரம், செடி கொடிகளுக்கு வேர்களும்