பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/243

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது



231


ஒருமைப்பாடே அதிகம். அங்கு மோதலில்லை. அந்தரத்தில் தொங்கும் அண்டசராசரங்களும் கூட ஒன்றோடொன்று மோதாமல் இயங்குகிற அமைப்பில் வியத்தகு ஒருமைப் பாட்டினைப் பார்க்கிறோம். வெளித்தோற்றத்தில் முரண்பாடுகள் காணப்பட்டாலும் ஒருமைப்பாடே மிகுதியும் மேம்பட்டு விளங்குகிறது. வேற்றுமைகளுக்குள்ளும் ஒற்றுமை-ஒருமை காண்பது பாரதப் பண்பு. இந்தப் பண்பின் வழியாகப் பாரிலுள்ளோரைப் பகையின்றி வாழச் செய்யலாம்.

ஒற்றுமையும், ஒருமைப்பாட்டுணர்வும் ஒன்றல்ல ஒற்றுமையென்பது தற்காலிகமான கூட்டுச் சேர்க்கை. அது தற்காலிகமானதாகவும் இருக்கலாம். நிர்பந்தத்தின் காரணமாகவும் இருக்கலாம். ஒற்றுமையைவிட ஒருமைப்பாடு மிக மிக உயர்ந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகுக்கு ஒரு நூல் செய்த திருவள்ளுவர் ஒருமைப் பாட்டையே உயர்த்திப் பார்க்கிறார். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது அவர் வாக்கு மேலும் அவர்,

"ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து"

என்றார்.

மானிட இனத்தின் சிறப்புமிக்க இயல்பு ஒழுக்க முடைமை. திருவள்ளுவர் ஒழுக்க நெறியில் பலவற்றைப் பகுத்துக் கூறினாராயினும் ‘உலகத்தொடொட்ட ஒழுகல்’ மிகச் சிறந்த ஒழுக்கமென வரையறுத்து வற்புறத்திக் கூறுகின்றார்.

இன்றைய சூழ்நிலையில் நமது பாரத நாட்டுக்கு ஒருமைப்பாடு மிகவும் தேவைப்படுகிறது. நாள்தோறும் செய்தித் தாள்களைப் புரட்டினால், ஒரு கந்தல் துணியைப் பார்ப்பது போன்ற ஒர் உணர்ச்சி நமக்கு ஏற்படுகின்றது. அதாவது இன, வகுப்புக் கலவரச் செய்திகளையும் அரசியல்