பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/254

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இலக்கணம் கண்ட மொழி. தமிழில் மொழிக்கு மட்டுமா இலக்கணம்! தமிழர்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் உண்டு. ஆதலால், தமிழ்மொழி சிறந்த மொழி, தமிழ் தழீஇய வாழ்க்கை நாகரிக வாழ்க்கை. பண்டைத் தமிழரின் வாழ்வில் மிளிர்ந்த சிறப்பு மிக்க நாகரிகக் கூறுகள் உலகில் வேறு எங்கும் கிடைப்பதரிது. ஆயினும் என்? இன்றைய தமிழரின் நிலை என்ன? பெருங்காயம் இருந்த பாண்டம் பெருங்காய வாசனை தர இயலுமா?

தமிழக வரலாற்றில்

இரண்டாயிரம் ஆண்டு காலமாகத் தமிழக வரலாறு நகரவில்லை. இடையில் அப்பரடிகள், வள்ளலார் போன்ற சமயச் சான்றோர்களும் தலைவர் காமராசர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற அரசியல் தலைவர்களும் நகர்த்த முயன்றனர்; நகர்த்தினர். கொஞ்சம் நகரவும் செய்தது. ஆனால் அவர்களுடைய மறைவிற்குப் பின் மீண்டும் பழைய நிலைக்கே வந்து விட்டது. இல்லை, இருந்த நிலையைவிட மோசமாகிவிட்டது. அதனால் தமிழக வரலாற்றில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் வாழ்க்கையை இருள் கவ்வி மூடிமறைத்து வருகிறது. தமிழர்கள் துன்பப்படுகின்றனர். இந்தத்துன்பச் சூழ்நிலைக்குக் காரணம் தமிழர்களேயாம். உண்மையைச் சொல்கின்றோம்; வேறு யாருமில்லை! தமிழர்களுக்குப் புத்தி வருமா? வள்ளுவத்தைப் பயில்வார்களா? வள்ளுவத்தின் வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்களா?

தமிழகத்தில் "நான்” “எனது”

செருக்கு, கெட்ட குணம்; அழிக்கும் குணம். "நான்” -"எனது” என்ற சொற்கள் மானிட நாகரிகத்தையே அழிக்கும் சொற்கள்! "நான்” என்ற உணர்வு மனிதனை, மற்றவர்களோடு சேரவொட்டாமல் தடுத்துவிடுகிறது. அதனால்