பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/277

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



265


பெற்றது. அதனால் தாய்மொழிக் கல்வி பற்றி எழுதப் பெறவில்லை. கல்வி மானிடத்திற்குப் பொது. உலக மானிடர் பேசும் மொழிகள் அனைத்தும் மானிடர்க்கு உரிமையுடைய மொழிகளேயாம். அனைத்து மொழிகளையுமே கற்பது மானிடரின் கடமைதான்! இலக்கியத் திறனோடு கற்காது போனாலும்-ஆய்வு நிலை மனப்பாங்குடன் கற்காது போனாலும் அனைவருடனும் உறவு கொண்டு பழகும் அளவிலாவது மற்ற மொழிகளைக் கற்பது வரவேற்கத் தக்கது. திருக்குறள் கற்றலை வற்புறுத்துவதைப் போல - இல்லை, அதைவிட முதன்மையாக-அறிவுடைமையை வலியுறுத்துகிறது.

"அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்"

என்பது திருக்குறள்.

அறிவு, தாய்மொழிக் கல்வி வாயிலாகத்தான் எளிதில் வந்தமையும். மொழியின் பயன் மற்றவர்களுடன் இணக்கமான உறவை வளர்த்துக் கொள்ளுதல். அறிவின் பயன், பெற்ற உறவைத் தாழாது பேணல். அடுத்து, உலகியற்கையைத் தனக்கும் தன்னுடைய சமுதாயத்திற்கும் பயன்படுமாறு ஆக்கிக் கொள்ளல். இனிய செல்வ, இக்குறிக்கோள்கள் நிறைவெய்தா விடின் வளர்ச்சி இல்லை; வாழ்வு இல்லை; அமைதி இல்லை. ஆதலால், ஒரு மொழியின் காரணமாக நமது உலகியல் நலன்களை இழந்து விடுவோம் எனில் அந்த மொழியை எதிர்க்கலாம். தவறில்லை! எதிர்க்கவும் வேண்டும். ஆதிபத்தியம், வல்லாண்மை சார்ந்த மேலாண்மை எங்கும் எப்போதும் எதிர்க்கக் கூடியது. ஆனால், அந்த மொழியினைச் சார்ந்தோருடைய ஆதிபத்திய உணர்வை - வல்லாண்மையையே எதிர்த்துப் போராட வேண்டும். அதற்குத் துணையாக அந்த மொழி அமையாமல், பாதுகாக்கத் தக்க வகையில் அந்த மொழியையும் எதிர்க்கலாம். ஆனால் அந்த மொழியை விரும்பிக் கற்கக்