பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/283

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



271


கற்கும் மொழி! தமிழ் வாயிலாகக் கற்போம்! ஆங்கிலம் மொழிப் பாடமாக மட்டுமே கற்பிக்கப் பெறுதல் வேண்டும். இது தொடர்பாக நிறைய எழுத வேண்டியிருக்கிறது. தொடர்ந்து எழுதுகின்றோம்.

இன்ப அன்பு
அடிகளார்
9. தாய்மொழிவழிக் கல்வி-4

இனிய தமிழ்ச் செல்வ,

நமது மடலின் சிந்தனைகள் செயலாக்கம் பெறுவதை நாட்காலையில் படிக்கும் செய்தித் தாள்கள் எடுத்துக் கூறுகின்றன! மகிழ்ச்சிதானே!

இனிய செல்வ, தமிழ்நாடு சட்டமன்றம் இந்திய ஆட்சி மொழி குறித்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தீர்மானமாவது; "இந்திய தேசிய மொழிகள் நடுவணரசின் ஆட்சி மொழியாகும் தகுதிபெறும் வரை ஆங்கிலம் நடுவணரசின் ஆட்சிமொழியாகத் தொடர்ந்து நீடிக்க வேண்டும்” என்பதாகும். அதாவது, "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும்வரை" என்பதற்குப் பதிலாக "இந்திய தேசிய மொழிகள் நடுவணரசின் ஆட்சி மொழியாக அமையும் காலம் வரை" என்பது திருத்தம். இனிய செல்வ, இந்திய தேசிய மொழிகள் 14. இவற்றுள் தமிழும் ஒன்று. இந்திய அரசின் அலுவல் மொழியாகத் தமிழும் இடம்பெறவேண்டும் என்பதே தீர்மானத்தின் சாரம். தமிழராகப் பிறந்தோர் அனைவரும் இந்தத் தீர்மானத்தை வரவேற்பர் என்பது தெளிவு. ஆனால், தீர்மானம் செயலாக்க அடிப்படையில் அமைந்ததாகத் தெரியவில்லை.

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு”

என்ற திருவள்ளுவர் வழியில் சிந்திக்க வேண்டும். நடுவணரசின் ஆட்சி மொழியாகத் தமிழ் இடம்பெற வேண்டுமானால்