பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/291

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



279


துன்பங்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருகின்றன; ஆனால் ஆரவாரத்திற்குப் பஞ்சமில்லை! இனியசெல்வ தொடர்ந்து எழுதுவோம்!

இன்ப அன்பு
அடிகளார்
12. சலத்தால் பொருள் செய்யற்க

இனிய செல்வ!

பல மடல்கள் எழுதத் தவறிவிட்டன. அன்பு கூர்ந்து பொறுத்தாற்றிக் கொள்க.

இன்றும் நாடு தழுவிய நிலையில் பேசப்பெறும் ஒரு செய்தி ‘ஊழல்’ ஆகும். இந்த ஊழல், கையூட்டு, (லஞ்சம்) வேண்டியவர்க்குச் சலுகை ஆகிய வழிகளில் கால்கொண்டு வளர்கிறது. கையூட்டு இன்று தோன்றிய வழக்கமல்ல. நம்முடைய நாட்டில் பன்னெடு நாள்களாகவே வளர்ந்து வந்துள்ள ஒரு தீய பழக்கம்-தொற்றுநோய். இது இன்று வளர்ந்து நாட்டளவினதாகிய நோயாக வளர்ந்துவிட்டது. ஊழலும் தேசியமயமாகிவிட்டது.

இந்தக் கையூட்டுப் பழக்கத்தை முதன் முதலில் கண்டு அறிமுகப்படுத்தியமை மதத்தலைவர்களையும் புரோகிதர்களையுமே சாரும். முதன் முதலாகக் கடவுளுக்குக் கையூட்டுக் கொடுத்து வீடு பெற முயலும் வழியை, புரோகிதர்கள் அறிமுகப்படுத்தினர். இதனைச் சங்க இலக்கியம் "அறவிலை வாணிகம்" என்று கேலி செய்கிறது. என்ன செல்வ, சிரிக்கிறாய்? சிரித்து என்ன செய்வது? இன்றும் நமது சமய வாழ்க்கையில்-திருக்கோயில் நிர்வாக அமைப்பில் வணிக வாடையே மிகுதி. மதப் புரோகிதர்களால், மதத் தலைவர்களால் தொடங்கி வைக்கப் பெற்ற கையூட்டு முறை வளர்ந்து ஆண்டவன் சந்நிதிவரை ஆள்பவர்கள் சந்நிதிவரை வளர்ந்து விட்டது. கையூட்டுமூலம் வளரும் பொருள், - வாழ் வளிக்காது; ஆக்கம்போல் காட்டிக் கேட்டினையே தரும். இனிய செல்வ! தவறான வழியில்