பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/301

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



289


திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். ஆயினும் என்ன? செல்வ, திருக்குறளைப் பலரும் படித்தனர்; உரைகள் எழுதினர். ஆனால் யார் ஒருவரும் திருக்குறள் நெறியில் வாழ்ந்திட ஆர்வம் காட்டவில்லை. அதனால் திருக்குறள் நெறியில் சமுதாயம் வளரவில்லை. வளராதது மட்டுமல்ல. மேலும் மோசமாகிவிட்டது. நாளுக்கு நாள் நமது நிலை மோசமாகிக்கொண்டிருக்கிறது. இந்த வார்த்தைகளை வழக்கம் போலப் புழுதிப் போரில் புலம்பம் என்று ஏளனம் செய்துவிடவேண்டாம். இது ஒரு அறிவார்ந்த உண்மை.

இனிய செல்வ! இன்று தென் இலங்கையில் தமிழினம் அழிக்கப்படுகிறது! யாரால் அழிக்கப்படுகிறது? செல்வ, உன் வார்த்தை உண்மையல்ல. சிங்களர்களால் அழிக்கப் பெறவில்லை. தமிழர்களாலேயே அழிக்கப் பெறுகிறது. இதற்குத் துணையாக வேறு வழியின்றி இந்திய அமைதிப்படையும் துணை செய்ய வேண்டியதாயிற்று. ஆம். செல்வ! தமிழர் நலம் காக்க-சிங்களர்-தமிழர் நலம் காக்க-இலங்கையின் நலம் காக்க இந்தியாவிலிருந்து அமைதிப்படை சென்றது. இலங்கை அரசு இந்திய அமைதிப்படையை வரவேற்கிறது. சிங்களர்கள் தொடக்கத்தில் எதிர்த்தாலும் இப்போது அமைதியாகி விட்டனர். எதிர்ப்பும் இல்லை. மகிழ்ச்சி வரவேற்பும் இல்லை. முற்றாக வரவேற்பை எதிர்பார்க்க இயலுமா? ஒரு நாட்டில் அயல்நாட்டுப் படை இறங்குவதை எந்தக் குடிமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்? ஆனாலும் மிக உயர்ந்த அரசியல் தந்திர அடிப்படையில் இந்திய இலங்கை ஒப்பந்தம் இயற்றப்பெற்று இலங்கையில் மனித வாழ்வின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் உத்தரவாதம் செய்யப்பெற்றது. இது வரவேற்கத்தக்க மகிழ்வான செய்தி. விடுதலைப் புலிகளும் தொடக்கத்தில் விருப்பத்துடன் வரவேற்காது, போனாலும் யாழ்ப்பாணத்தில் ஒரு பகிரங்கப் பொதுக் கூட்டம் நடத்தி உடன்படிக்கையை வரவேற்றார்கள்; ஆயுதங்களை ஒப்படைத்தார்கள். ஆனால் நடந்தது என்ன? இனிய செல்வ, விடுதலைப் புலிகளின் நடவடிக்கையில் உண்மையில்லாமல்

தி.20.