பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/304

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்கள் என்றால் மூன்று வகையான தமிழர்கள் வாழ்கின்றார்கள். அவர்களுள் ஒருவகையினர் இந்தியத் தமிழர்கள். (இந்தியாவிலிருந்து சென்ற தொழிலாளர்கள்; அங்கேயே பல ஆண்டுகள் தங்கியவர்கள்) அடுத்த வகையினர் தொழில் வாணிகம் கருதி இந்தியாவிற்கும் இலங்கைக்கும் போய் வந்து கொண்டிருப்பவர்கள். மூன்றாவது வகையினர் இலங்கையிலேயே - யாழ்ப் பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வழிவழியாக வாழ்ந்து வரும் பூர்வீகக் குடிகளாகிய தமிழர்கள். இவர்களே ஈழத்துத் தமிழர்கள் என்று அழைக்கப் பெறுகின்றனர். இனிய செல்வ! இந்த மூன்றுவகைத் தமிழர்களையுமே பாதுகாக்க வேண்டியது நமது கடமை! இதில் இந்தியத் தமிழர்களுக்கும் - இலங்கைத் தமிழர்களுக்கும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. இந்தியத் தமிழர்கள் வாழ்வினும் சாவினும் தங்களைத் தாங்களே சார்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இன்று இலங்கை அரசுடன் நட்புறவுடன் வாழ்ந்து வருகின்றனர்.

அடுத்து, இலங்கைத் தமிழர்களில் முஸ்லீம்கள், ஈழத் தமிழர்கள் போராட்டங்களில் சேரவும் இல்லை; அவர்களோடு உடன் வாழவும் விரும்பவில்லை. வடக்கு கிழக்கு மாகாண இணைப்பில் ஒரே சிக்கல், ஆங்கு வாழும் இஸ்லாமியரும் சிங்களவர்களும் இணைப்புக்கு உடன் பாடததுதான்! மட்டக் களைப்புத் தமிழர்களிலும் பெரும்பான்மையோர் ஆளும் அரசாங்கத்தினருடன் கூட்டு. அவர்களுள் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒர் அமைச்சர் என்றெல்லாம் இருக்கின்றனர். அடுத்து யாழ்ப் பாணம் பகுதியில் வாழும் தமிழர்கள். இவர்கள்தாம் இன்றைய போராட்டத்திற்குரிய மக்கள். இந்த யாழ்ப் பாணத்துத் தமிழர்களில் தனி ஈழம் கேட்டுப் போராடும் அணி ஒன்றல்ல; பலப்பல! இத்தனை அணிகளும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை வரவேற்று விட்டன. ஆனால் நடை