பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/317

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



305


இன்னமும் பாதுகாப்பு கிடைக்கவில்லை. ஆம்! இனிய செல்வ! அமெரிக்க-சோவியத் நாடுகளின் தலைவர்கள் மாஸ் கோவில் கூடினர்; கலந்து பேசினர். மானிட சமுதாயத்தை அழிவிலிருந்து பாதுகாப்பதற்குரிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை இருவரும் செய்து கொண்டுள்ளனர். ஏவுகணைகள் அதாவது கண்டம் விட்டுக் கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகள் 50 விழுக்காட்டுக்கு மேல், உற்பத்தி கட்டுப்படுத்தப் பெறும். அணு ஆயுத சோதனைகள் பரஸ்பர கண்காணிப்பின் கீழ் நடைபெறும். இதுவே ஒப்பந்தத்தின் சாரம்.

இனிய செல்வ! உலகத்தைக் காப்பாற்ற இந்த உடன் படிக்கை போதாது. போர் ஆயுதங்களையே நாடுகள் உற்பத்தி செய்யக்கூடாது. படைகள் உலக நாடுகளின் பேரவையிடம் மட்டும் தான் இருக்க வேண்டும். நாடுகளுக்குரியது, போலீசு படை மட்டும்தான் என்ற நியதி உருவாக வேண்டும். இத்தகையதொரு நியதி எதிர்காலத்தில் உருவாகத்தான் போகிறது. மண்ணகம் அமைதி தழுவிய வாழ்க்கையை ஏற்பது என்பது வரலாற்றின் கட்டாயமாகும். அமெரிக்க-சோவியத் நாடுகள் இரண்டு சித்தாந்தங்களின் பிரதிநிதிகள். ஒன்று முதலாளித்துவம். பிறிதொன்று பொதுவுடைமை. இனிய செல்வ, இவ்விரண்டு நாடுகளுமே வளர்ந்து எழுகின்றன. இவ்விரண்டு நாடுகளுக்கிடையில் இருந்து வந்த கசப்புணர்வு அளவற்றது. ஆயினும் அண்மைக் காலமாக இரண்டு நாடுகளின் தலைவர்களும் சந்திக்கின்றனர்; கலந்து பேசுகின்றனர்; மானுடம் வாழ்வதற்குரிய நெறிமுறைகளை ஆய்வு செய்கின்றனர். இது உலக வரலாற்றிற்கு ஒரு புதுமை போல! இனிய செல்வ, இன்றைய சோவியத் ஒன்றியத் தலைவர் கார்பொச்சேவ் அற்புதமான மனிதர்! சிந்தனையாளர்! சமாதானத்தின் காவலர்! இவர் முதலில் அமெரிக்காவுக்குச் சென்றார்! அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரீகனும் நல்ல மனிதர், இவ்விரு தலைவர்களும் இன்று திருக்குறள்

தி.21.