பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/318

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வழியில் இணைந்து நடைப்பயிலத் தொடங்கியுள்ளனர். ஆம்! திருவள்ளுவர் வழியில் நடக்கின்றனர்.

திருவள்ளுவர் படை வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அந்தப் படை போர் செய்வதற்காக அல்ல! எதிரியை அச்சுறுத்துவதற்காகத் தான். படை. அரண் முதலியன பற்றிப் பேசிய திருவள்ளுவர், மிகுந்த பகை ஆகாது என்றும் கூறியுள்ளார். "பகைமாட்சி" என்று ஒர் அதிகாரமே இயற்றியுள்ளார். “இகல்” என்னும் ஒர் அதிகாரம் இயற்றி உள்ளார். இனிய செல்வ! இந்த அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்கள் எல்லோரும் படிக்கத்தக்கன. இந்த அதிகாரத்தில் பகை கொண்டு பொருதுவதால் வலிமை கெடுகிறது என்று வள்ளுவம் கூறுகிறது. பிற உயிர்களுடன் கூடிக் கலந்து வாழாமல் பகை வழிப்பட்டு வாழும் குற்றம் பொருந்திய வாழ்க்கை தகாது என்று குறள் கூறுகிறது. இனிய செல்வ! சிலர் வலியப் பகைமைக் குணங்கொண்டு மோதவருவர் என்று வள்ளுவம் கூறுகிறது. இன்றைய வல்லரசு நாடுகள் இந்தத் திருக்குறள் நெறிக்குப் புத்துயிர் கொடுத்துள்ளன. செல்வ! மீண்டும் ஒரு திருக்குறள். இதோ படித்துப்பார்!

இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம்
நன்னயம் என்னும் செருக்கு.

(860)

எவ்வளவு அற்புதமான திருக்குறள்! ஒருவன் மாறுபாடு கொண்டு வாழ்வானாகில் பொல்லாதன பல உண்டாகும். இதற்கு மாறாக நட்புக் கொண்டொழுகின் செல்வம் உணடாகும.

இனிய செல்வ! இன்றைய உலக வல்லரசு நாடுகளாகிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் பகைமை பாராட்டாது நேச நாடுகளாக விளங்குவது உலகத்திற்கு நல்லது. ஏன், நமக்கும் நல்லது. இனிய செல்வ, உலகப் பேரரசுகள் கூட ஒன்று சேர்கின்றன! ஆனால்! ஆனால்...! நம்முடைய நாட்டு மக்கள், குறிப்பாகத் தமிழர்கள்