பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/325

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



313


இலவசக்கல்வி கேட்பது இலவசமருத்துவம் கேட்பது போன்றவைகள் வரவேற்கத் தக்கன. இந்த இனங்கள் புதிய நிதிச் சுமையைக் கொண்டுவராது. அதேபோழ்து சீரான வாழ்க்கைக்குத் துணை செய்யும்.

இன்ப அன்பு
அடிகளார்
25. சலுகையின் எல்லை

இனிய செல்வ!

நல்வாழ்த்துக்கள்! திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. ஆயினும் மானிட இயல்பினை நன்றாகத் தெரிந்து, தெளிந்து இயற்றப்பெற்ற நூல். உளஇயல் கற்பதற்கு ஏற்ற நூல் திருக்குறள். இன்றைய வரலாற்றைக் கூர்ந்து நோக்கின் திருக்குறளின் அறிவுரைகளின் அருமைப்பாடு புரியும். சான்று இன்றைய செய்தித்தாள்களில் தொடர்ந்து வரும் செய்திகளாகும். ‘ஆதி திராவிடர் பேரணி’, 'வன்னியர் போராட்டம்', 'யாதவர் மாநாட்டுக்கோரிக்கை', 'பிராமணர்கள் உண்ணாவிரதம்', 'தேவர் பேரவை மாநாடு' என்பன போன்ற செய்திகளேயாம், எங்குப் பார்த்தாலும் சாதி வழிப்பட்ட இயக்கங்கள். இனிய செல்வ! அரசியல் கட்சிகளுக்குள்ளும் கூட சாதீய சக்திகள் ஊடுருவி விட்டன, இனிய செல்வ, குறிப்பாகச் சொன்னால் இன்றைய தமிழகத்தில் தமிழர்கள் இல்லை; இந்தியாவில் இந்தியர்கள் இல்லை. அதாவது ஒருமைப்பாட்டுணர்வுடன் கூடிய சமுதாயம் காலூன்றவில்லை மனிதப்படைப்பு இயற்கை செய்தது! இல்லை - இயல்பான பரிணாம வளர்ச்சி! சாதீயப்படைப்புகள் மனிதன் செய்தவை. இனிய செல்வ, இந்தப் பொல்லாதபுன்மையுடைய சாதி, குல, கோத்திர வேற்றுமைகளை எதிர்த்துத் தமிழர்கள் - நாயன்மார்கள் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்கள். இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்று ஆற்றுப்படுத்தினார்கள். பனம்பாரனார்