பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/329

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



317



தீண்டாமையால் அல்லற்படுபவர்களுக்குக் குடும்ப அடிப்படையில் 25 ஆண்டுகள் அவசியமானால் மேலும் 10 ஆண்டுகள் சலுகை, என்று ஒரு கோட்பாடு வகுத்துக் கொண்டால் சாதிகள்-சாதியின் உட்பிரிவுகள் சிக்கல் தோன்றாது. குறிப்பிட்ட கால வரையறையிருப்பதால் விரைவுணர்வுடன் பணிகள் நடைபெறும் காலத் தவணைப் படி முறைகள்படி வளர்ந்த குடும்பங்கள் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப் பெறுவதால் கடைகோடி மனிதனுக்கும் வாய்ப்புக் கிடைக்கும். என்றாவது ஒரு காலத்தில் இந்தியாவில் தீண்டாமை இல்லை என்ற சாதனையை அடையலாம்; அடையமுடியும். இப்போதுள்ள நடை முறையில் என்றுமே தீண்டத்தகாதவர்கள் இருப்பார்கள். வாயடி, கையடிக்காரர்கள் சலுகையைத் திரும்பத் திரும்பப் பெற்றுப் பயனடைவர். இதில் என்ன சமூக நீதி இருக்கிறது? இதனால் தீண்டாமை சமுதாயத்தில் நிலைப்பட்டுப் போகுமே என்ற கவலை தோன்றுகிறது.

இனிய செல்வ, சிலர் தமது தலைமைப் பதவிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகச் சாதிகளைக் காப்பாற்றப் போராடுவர். இது நல்லதா? யோசித்து எழுதுக! இதே நிலைதான் பிற்பட்டோர் நிலையிலும் கூட! இந்த ஒதுக்கீட்டுப் பேச்சு தலை தூக்கி நிற்பது அரசுப் பணிகளுக்குத் தான்! கல்வி, அறிவு பெறுவதற்கே! கல்வியையும் வேலை வாய்ப்பையும் ஒன்றாக்கினால் என்றும் அறிவு வளராது; தற்சார்பு நிலை உருவாகாது; தன்னம்பிக்கையும் ஏற்படாது. அரசைச் சார்ந்தே வாழும் ஒட்டுண்ணியாக மக்கள் மாறுவர் - வளர்வர். இது நன்றன்று. இந்தியாவில் கற்ற அனைவரும் அரசுப் பணியில் இடம் பெறுவது என்பது நடை முறைச் சாத்தியமல்ல. ஆதலால் ஆங்காங்குப் படித்த இளைஞர்களும் தொண்டு நிறுவனங்களும் தொழிற்சாலைகளை நிறுவி வேலை வாய்ப்புக்களைத் தோற்றுவித்து வழங்க வேண்டும். இந்த நூற்றாண்டின் அறம், வேலை வாய்ப்பு வழங்குவதேயாம். ஆதலால் சாதிகளை நினைவில் வைத்துக்