பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/337

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



325


அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் காலம்! தனி மனிதனின் குறை-குற்றங்கள் அலசப்படும் காலம்! இந்தச் சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது? நம் நாட்டில் ஒரு பழக்கம் ‘விளம்பரம்’ ஆனவர்களை-விளம்பரம் ஆனவைகளை அப்படியே நம்பிவிடுவது! பின்பற்றுவது! ஒரு திறமை வாய்ந்த ஜோசியர் இருந்தால் ஒரு கோயில்-ஒரு கடவுள் எளிதில் வெற்றி பெற்று விடுகிறது. அதுபோல், ‘பாராட்டுபவர்கள் - அர்ச்சகர்கள் சிலரும் ஒரு பத்திரிகையும் இருந்தால் போதும்-எளிதில் தலைவராகி விடலாம்’ நாமும் நம்பி விடுவோம்! அது போலத்தான் பயன்படுத்தும் பொருள்களையும் கூட நம்பி விடுவோம்! விளம்பரமான பொருள்கள் மீது நமக்கு ஒரு அலாதியான நம்பிக்கை! பற்று! சோதனை செய்யாமல் நம்பி விடுவோம்! அவை தரம் குறைந்தவையாக இருந்தால்கூட நாம் அதை வெளியில் கூறுவதில்லை; வாங்காமலும் இருப்பதில்லை! நமது நாட்டில் இங்ஙனம் நடப்பவைகள் பலப்பல! லஞ்ச லாவண்யம் என்று குறைகூறிக் கொண்டிருப்பவர்கள் வாங்கும் கையூட்டுகளுக்குக் கணக்கே இல்லை! ஆதலால் தேர்தலில் யார் நிற்கிறார்கள் என்று ஆய்வு செய்வதில் பயனில்லை! பேசுபவர்கள் யார்? ஆராய்ச்சி வேண்டவே வேண்டாம்! உறுதிமொழிகளை வழங்குபவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் நாம் அவரை நம்பி, எதையும் நம்பக்கூடாது. பின்பற்றக் கூடாது! எடுத்துக் கூறும் உறுதி மொழிகள் சாத்தியமானவையா? இன்று இவ்வளவு உறுதி மொழிகளை அள்ளி வீசுபவர் இதற்கு முன்பு அவருக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களில் என்ன செய்தார்? அவற்றின் பயன் என்ன? என்று ஆய்வு செய்வது நமது கடமை. இங்ஙனம் ஆய்வு செய்யாததால் இன்று கூட நாம் அளவுக்குமேல் ஒருவரைத் தலைவராக, இல்லை! - அவதார புருஷராக மதித்து வருகின்றோம். ஆனால் அவர்களுடைய சொல்லையும் செயலையும் கூர்ந்து நோக்கின் அவர்கள் ஒரு சராசரி மனிதர்கள்தாம் என்பது விளங்கும்! அதுபோலவே,