பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/341

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



329



இனிய செல்வ, மூன்றாவது, கடுமையான ஒரு சிக்கல்; தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இன்மை. வேலை வாய்ப்பை வழங்குவது என்பது இன்றுள்ள அவசர அவசியமான பணி! ஆயினும் நெடிய நோக்குடன் இந்தப் பிரச்சினையை அணுகவேண்டும். அதாவது, உற்பத்தியோடு தொடர்பில்லாத பணியிடங்களைத் தோற்றுவித்து வேலை வாய்ப்பை வழங்கினால் மேலும் நிதி நெருக்கடி ஏற்படும். கடந்த பத்து ஆண்டுகளில் ஏராளமான பேர் வேலை பெற்றுள்ளனர். ஆனால், உண்மையில் வேலை இல்லை. உதாரணமாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இரண்டு காவல் ஆய்வர். இரண்டு காவல் நிலையத்திற்கு ஒர் உயர் ஆய்வர். இது அவசியமில்லாத செலவு மட்டும் அல்ல, பயனற்றதும் கூட! ஆதலால், உற்பத்தியோடு தொடர்புடைய தொழில்களைத் தொடங்குவதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இனிய செல்வ, இந்தச் செய்திகள் மாண்புமிகு கலைஞருக்குத் தெரிந்தவையே! அவர் ஓர் எரிகின்ற விளக்கு! ஆனால் நமக்கும் ஒரு வேலை வேண்டாமா? அவர் தூண்டா விளக்கானாலும் நமக்கு வாய்த்துள்ள தூண்டும் பழக்கத்தின் வழி இந்தப் பரிந்துரைகள்!

இன்ப அன்பு
அடிகளார்
31. எல்லைக்கண் நின்றார் துறவார்

இனிய செல்வ,

தமிழ் நாட்டில் புதிய அரசு, கலைஞர் தலைமையில் அமைந்திருக்கிறது. கலைஞர் அவர்கள் நம்மை அரசியல் அரங்கத்திற்குத் தாமே நினைந்து வலிய அழைத்தவர்! ஆம்! தமிழக மேலவைக்கு அழைத்தார்; பல்வேறு பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். கலைஞர் அவர்களுடைய அரசு அளித்த உதவியினால்தான் தெய்விகப் பேரவை மிகவும் சிறப்பாக இயங்கியது. அதனுடைய இயக்க நடைமுறை