பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/350

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அரசுகள் வழங்குவதா? என்ற விவாதம் கிளம்பியிருக்கிறது. நம்மைப் பொருத்த வரையில் இதை வரவேற்கின்றோம்.

இனிய செல்வ, ஏற்கனவே நமது நாட்டில் மைய மாநில அரசுகளுக்கு இடையே மோதல்கள் இருந்து வருகின்றன. மைய அரசிடம் அதிகாரங்கள் குவிந்துள்ளன என்றெல்லாம் விவாதிக்கப்பட்டு வந்துள்ளன. இது தொடர்பாக சர்க்காரியா கமிஷன் அறிக்கை வேறு முடிவு செய்யப்பெறாமல் தேங்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மைய அரசு பஞ்சாயத்துத் திருத்தச் சட்டத்தைப் பற்றிப் பேசினால் ஐயம் தோன்றாமலிருப்பதற்கு வழியில்லை.

இனிய செல்வ,

"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை"

என்றார் திருவள்ளுவர். ஆதலால், கிராம பஞ்சாயத்தைப் பொறுத்தவரையில் நடுவணரசினுடைய எண்ணம் சரியானது. அதுமட்டுமல்ல செய்யவேண்டிய காலகட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் அரசைச் சார்ந்தே வாழும் மனநிலையைப் பெற்று வருகின்றனர். என்றைக்கு நாட்டு மக்கள் அரசுக்கு உடமையாகி, அரசுக்கு அரணாகவும் துணையாகவும் இருப்பார்களோ, அன்றைக்கே சுதந்திரத்துக்குப் பாதுகாப்பு, உண்மையான குடியரசு நாடாகவும் விளங்கும். ஆனால், இதை எப்படிச் செய்வது என்பதில்தான் கருத்து வேற்றுமை, முதலில் ஒவ்வொரு மாநில முதலமைச்சர்கள், ஊராட்சி அமைச்சர்கள் ஆகியவர்கள் முன்னிலையில் ஊராட்சி ஒன்றியங்கள் தலைவர்களையும் இந்தப் பிரச்சினையில் அக்கறையுடையவர்களையும் கொண்டுவிவாதித்திருக்க வேண்டும். ஊராட்சி மன்றங்களை நெறிப்படுத்த-வளர்க்க மாநில அரசுகளுக்கு மைய அரசு வழிகாட்டுதல் தந்து மாநிலச் சட்டசபைகளிலேயே சட்டம் இயற்றும்படி செய்யலாம். இதுவே போதுமானது. இதற்கு எந்த மாநில அரசாவது மறுத்தால் மைய அரசு பாராளு