பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/356

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இந்தியாவுக்கு எதிராக நினைக்கவும் தொடங்கிவிட்டனர். அவ்வண்ணமே பேசினர்; ஏன், இந்திய அமைதிப்படையை எதிர்த்துப் போராடினர்; ஏன் இந்த நிலை?

இன்று விடுதலைப் புலிகளும், இலங்கைக் குடியரசு தலைவரும் இந்திய அமைதிப்படையைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். இனிய செல்வ; நமக்கு ஏன் இந்த அவலம்? விடுதலைப்புலிகள், இலங்கை அரசுக்கும் சிங்கள தீவிர வாதிகளுக்கும் அஞ்சி இந்தியாவுக்கு வந்தனர். இவர்களுக்கு இலங்கை ஒருமைப்பாட்டிலும் அக்கறையில்லை, இந்திய அரசின் கொள்கையாகிய நடுநிலைக் கொள்கையிலும் நம்பிக்கையில்லை இலங்கை அரசும் இலங்கையின் ஒருமைப்பாட்டில் அதிக ஆர்வம் காட்டாமல் விடுதலைப் புலிகளைச் சமாளிப்பது எப்படி என்ற கவலையுடனேயே இந்திய அரசை அணுகியது. இலங்கை அரசுக்கு, இலங்கையின் இனப்பகையில்லாத ஆட்சிக் கொள்கையில் நம்பிக்கையில்லை. பெரும்பான்மை இனவழிச் செல்லும் இயல்பு இன்றைய இலங்கைக் குடியரசுத் தலைவரின் கொள்கையாக இருக்கிறது. இந்தியா-இலங்கை நட்பிலும் இன்றைய இலங்கை குடியரசுத் தலைவர் பிரேமதாசாவுக்கு நம்பிக்கையில்லை. இந்தச் சூழ்நிலைகளையெல்லாம் ஆராய்ந்தால் ஈழத்துத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது. ஆனால், இங்ஙணம் கருதுவது தவறு. இந்தியா தலையிடாது போனால், இந்தியாவின்மீது விரோதம் கொண்டுள்ள நாடுகள் தலையிடும். அது இந்தியாவுக்கு நல்லதன்று.

இனிய செல்வ! இன்று என்ன நிலை? இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம், ஈழத் தமிழ் மாநிலம் கிடைத்தது. தேர்தல் மூலம் அமைந்த மாநில ஆட்சி நடக்கிறது; ஆனாலும் ஒப்பந்தப்படி அதிகாரப் பகிர்வு முற்றாக நடக்கவில்லை; "மாநில ஆட்சி" என்ற அமைப்பு தோன்றியிருக்கிறது. இதற்கிடையில் இந்திய வெறுப்பில்