பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/363

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



351


முறையில் கருத்துப் பரிமாற்றங்களே சாதனம்! அதிகாரம் அல்ல! இனிய செல்வ, எல்லாரையும் தழுவி நிற்கும் நட்புணர்வு இல்லாதார் பகைவரையும் நட்பாக்கிக் கொள்ளும் தகைமை இல்லாதார், ஜனநாயக முறையரசியலில் பங்கேற்பது நெறியும் அன்று; முறையும் அன்று.

ஜனநாயகத்தில் பெரும்பான்மை என்பதும் தவிர்க்க இயலாத அளவுகோலேயாம். பெரும்பான்மை என்பது, எதிர் விளைவுகளை உருவாக்காமல் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்! பெரும்பான்மையர் சிந்தனைகளை, கருத்துகளை மறுப்பதும் எதிர்ப்பதும் பெரும்பான்மையினரின் செயலாகிவிடக் கூடாது. ஒரு முடிவு நிலையில் செயற்பட்டாக வேண்டுமே என்ற நிலையில் தான் "பெரும்பான்மை” என்ற தத்துவம் பயன்படும். சிறந்த ஜனநாயகப் பண்புள்ள அரசியலே நாட்டுக்குத் தேவை.

"உலகம் தழீஇயது ஒட்பம்!”-என்று கூறுகிறது திருக்குறள். சண்டை போட்டுக் கொள்ள-ஒரு தீமை செய்ய அறிவா வேண்டும்? நட்பைக் காணவும் வளர்க்கவும்தான் அறிவு தேவை. அதுவும் சார்பில்லாத பொது நிலையில் உலகத்தவரிடம் நட்புக் கொள்ளுதல் வேண்டும். உலகத்தவரை நட்பாகக் கொள்ளுவதே அறிவு! மனம் சுருங்குதலும் விரிதலும் நல்வாழ்வின் அடையாளங்களல்ல! இனிய செல்வ, ஜனநாயகத்தின் சமூகவியலின் அரிச்சுவடியையே நாம் படிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

"உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு"

(425)
இன்ப அன்பு
அடிகளார்
38. காலம் அறிந்து செய்க!

இனிய செல்வ,

காலம் ஓர் அற்புதமான கருவி, ஆற்றல்! வாழ்வியலுக்குக் காலமே முதற்பொருள், காலத்தால் ஆகியதே