பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/370

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருக்கும் புதிய ஆட்சிக்கு நமது வரவேற்பு! இந்த ஆட்சி நாட்டின் நலன் கருதித்தீட்டிடும் திட்டங்களை நாட்டின் குடிமக்கள் என்ற உணர்வில் - நிறைவேற்றிட ஒத்துழைப்போம்! உழைப்போம்! இனிய செல்வ! ஜனநாயக ஆட்சிமுறை உள்ள நாட்டில் அரசியல் கட்சிகள் பகைமை உணர்வுடைய எதிர் எதிர் கட்சிகளாக இயங்கக்கூடாது! அரசியல் கட்சிகளுக்கிடையில் நட்பியல் அடிப்படையில் விவாதங்கள் வளர வேண்டும். கட்சி-பிரதி கட்சி அடிப்படையில் நாடாளுமன்ற சட்டமன்ற விவாதங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க வேண்டும். நாட்டின் நலனுக்குரிய காரிய சாதனை அடிப்படையிலேயே அணுக வேண்டும்! ஜனநாயக வழி ஆட்சி நடைபெறும் நாட்டில் ஆட்சிகள் மாறுவது தவிர்க்க இயலாதது! இப்படி மாற்றங்கள் நேரும்போது துள்ளி மகிழ்தலும் துயருறுதலும் தவிர்க்கப் பெறவேண்டும். காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவரும் தேதிய முன்னணியின் ஆட்சிக்குச் சரியான முறையான எதிர்க்கட்சியாக இருந்து ஒத்துழைப்புத் தரவேண்டும். அப்படியே தருவார்கள் என்று நம்புகின்றோம். தேசிய முன்னணிக்கு காங்கிரஸ் தாய் வீடு போல, ஆதலால் தேசிய முன்னணியும், அதன் தலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்பையும் கேட்பார்கள் என்று நம்புகின்றோம்.

இனிய செல்வ! நல்லன நடப்பதாகுக!

இன்ப அன்பு
அடிகளார்
41. அழுக்காறு கொள்ளற்க!

இனிய செல்வ,

தமிழினம் காலத்தால் முன்தோன்றி மூத்த இனம். தமிழகத்தின் வாழ்க்கையை நெறிமுறைப்படுத்த வேண்டிய இன்றியமையாமை தொல்காப்பியர் காலத்திலேயே இருந்த மையைப் பொருள் இலக்கணம் செய்ததன் மூலம்