பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/379

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



367


45. “நாமும் நமதும்” - வேண்டும்

இனிய செல்வ;

இன்றைய மனிதகுலத்தில் எல்லாரிடமும் இருப்பது "செருக்கு” என்ற தீய குணமாகும். “எனது நாடு" "எனது மொழி” “எனது இனம்” “எனது சமயம்” “எனது சொத்து” என்பன போன்றவை. பாவேந்தன் பாரதிதாசன் நாட்டுப்பற்றினால் அடுத்த நாட்டினை அழிக்கின்றான்-என்று கூறுகிறான்.

தென்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
சுதந்தரத்தால் பிறர் நாட்டைத் துன்புறுத்தல்;

என்பது பாரதிதாசன் பாடல்.

ஆதலால் நாடுகளுக்கிடையே உள்ள எல்லையை எடுக்கச் சொல்கிறான்.

"நாட்டொடு நாட்டை இணைத்து மேலே ஏறு",

என்பது பாவேந்தன் பாடல் வரி. ‘எனது’ என்ற சொல்லினைப் பாவேந்தன் வெறுக்கிறான்.

"இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
‘இது எனது’ என்னுமோர் கொடுமையைத்
தவிர்ப்போம்!”

என்று பாடுகின்றான்.

‘எனது’ என்ற சொல்லும், அந்தச் சொல் தோன்றுதற்குரிய பின்னணியும் ‘நான்’ என்ற அகந்தையை உருவாக்குகிறது. பணமும் அதிகாரமும் படைத்தவர்கள் ‘நான்’ என்ற சொல்லை அதிகமாகப் பயன்படுத்துவர். இனிய செல்வ, இந்த ‘எனது’ சென்ற காலத்தில் விளைவித்த துன்பமும் மிகுதி. இன்று தரும் இன்னல்களும் அதிகம். இனிய செல்வ என்ன செய்வது? யாரிடம் சொல்வது? இருக்கன் குடி கடவுள் சந்நிதியில் கூட ‘நான்’ தான் வம்புக்குக் காரணம். திருச்சி மாவட்டம் வி.களத்துார்க் கலகத்திற்கு "எனது மதம்” என்ற