பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/382

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முடியும்? இனிய செல்வ, பாலைவனம் பரப்பளவில் கூடுதல் தான்; பசுஞ்சோலை பரப்பளவில் குறைவுதான். பசுஞ்சோலைதானே நினைவுக்கு வருகிறது. அதுபோல, நமக்கு ஒற்றுமை. ஒருமைப்பாடு என்பதே நினைவு. ஆனால் இன்று நமது நாடு எங்கே போகிறது: மக்கள் வேறுபாடுகளையே காண்கிறார்கள்: இல்லை, வேறுபாடுகளைத் துருவித்துருவிக் கண்டு பிடிக்கிறார்கள். வேறுபாடுகளைப் பற்றியே பேசுகிறார்கள். வேறுபாடுகளை வளர்த்துத் தலைவர்கள் ஆகிறார்கள்:

இனிய செல்வ, "சகோதர ஒற்றுமை, அயலார் அன்பு, தம்பதிகள் இணக்கம் ஆகியன அழகானவை; பயன்தரத்தக்கவை” என்பது மூசானாரின் முதுமொழி, இனிய செல்வ, இவை மூன்றும் இன்று எப்படி அமைந்துள்ளன? சகோதர அன்பு-ஒற்றுமை ஆகியன இன்று அரிதாகிக்கொண்டு வருகின்றன, கடந்த பல ஆண்டுகளாக நம்முடைய வாழ்க்கைப் போக்கில் பணிப் பாங்கில் சகோதரர்களுக்கிடையில் சமாதானம் செய்து வைத்துச் சொத்துப் பிரிவினை செய்ய நேரிட்டது. இப்பொழுது உடன் பிறந்த சகோதரர்களுக்கிடையில் சமரசம் பேசிக் கொண்டிருக்கிறோம். சகோதர ஒற்றுமை அன்பு, சமரசம் இவையெல்லாவற்றையும் பின்தள்ளிவிட்டுச் சொத்துப் பிரிவினை உணர்ச்சியே தலை தூக்கி நிற்கிறது. இனிய செல்வ, அயலார் அன்பு-இன்று நமது நாட்டில் அருகிப்போன நிலையில் காணப்படும் ஒன்று. இந்த அயலார் அன்பை அரசியல் சொத்துரிமை பொய்மையான தலைமை உணர்ச்சி ஆகியன கெடுத்து வருகின்றன. இனிய செல்வ, அடுத்தது தம்பதியரிடத்தில் ஒற்றுமை; இதுபற்றி நாம் எழுத வேண்டுமா? நாள்தோறும் நமது நாட்டுச் செய்தித்தாள்களில் வரும் செய்திகள் மூலம் தம்பதியரிடத்தின் அன்பைவிட, தியாகத்தைவிட, “வரதட்சணையே" ஆட்சி செய்கிறது என்பது புலனாகவில்லையா? இப்படிச் சமுதாயத்தில் மூன்று நிலைகளிலும் வேற்றுமையே கோலோச்சுகின்றது!