பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/387

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



375


சமாதானம் "நிதி இல்லை! பணம் இல்லை என்ன செய்வது? இனிமேலும் கடன் வாங்க முடியாது” என்பதுதான்.

ஆம்! பிரதமர் சொல்லுவதில் உண்மை இல்லாமல் இல்லை! ஆயினும் நாட்டில் பணம் இல்லை என்று கூறுவது தான் உண்மையில்லை! நாட்டில் நிறைய பணம் இருக்கிறது! நாட்டில் பெரிய முதலாளிகளிடம் உள்ள கருப்புப் பணம் கங்கை-காவிரி இணைப்புத் திட்டத்திற்குப் போதும்! கருப்புப் பணம் சற்றேறக்குறைய 40,000 கோடி! இதுபோக அரசியற் கட்சிகள் தேர்தல் செலவுகளுக்காக மறைமுகமாக ஈட்டி வைத்துள்ள பணம் பற்பல கோடிகள்! இவையெல்லாம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படாமல் சாதி, இன, மதக் கலவரங்களை வளர்க்கவும் அரசியல் கட்சிகளுக்குள் உட்பூசலை வளர்க்கவும் பயன்படுகின்றன! உண்மையாகச் சொன்னால் நாட்டின் அழிவுக்குச் செலவாகின்றன!

நாட்டு மக்களில் எந்தத் தரப்பு மக்களிடத்திலும் நிதியைப் பற்றிய பொறுப்பான சிந்தனை இல்லை! அணுகுமுறை இல்லை! கடன் வாங்குதல், கடனை வஜா செய்யப் போராடுதல் முதலிய தீய பழக்கங்கள் மக்களிடையே பரவிவிட்டன! அரசு, நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கென வழங்கும் நிதி உதவிகள் அரசுக்குத் திரும்ப வருவதும் இல்லை! வங்கிகளுக்கும் இதே கதிதான்! இனிய செல்வ, நீ கேட்பது சரியான கேள்வியே! அரசுக்குத் திரும்ப வராதது ஒருபுறம் இருக்கட்டும்; மக்களாவது முன்னுக்கு வந்தார்களா? திட்டத்தின் இலக்காகிய ஏழை மக்களிடத்தில் கூட உருவாகவில்லை! 10 விழுக்காடு தான் செலவழித்த பணத்திற்குள்ள சொத்து உருவாகியிருக்கக்கூடும்! ஏன் இந்த அவலம்? பணிகள் முறையாக நிறைவேற்றப்படத்தக்கவாறு திட்டங்கள் அமையவில்லை! அவசரத்தில் அள்ளித் தெளிக்கும் நிலை!

இனிய செல்வ, நாம் ஏழைகள், நமது நாடு ஏழை நாடு என்ற எண்ணம் சமுதாயத்தில் எந்தமட்டத்திலாவது