பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/413

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



401



சோவியத்தில் நடந்த ஒரு பெரிய தவறு என்ன? பொதுவுடைமை அரசாங்கம் ஆதலால் "பொதுவுடைமை விதிகளில் உழைக்க வேண்டாம்" என்ற ஒரு சித்தாந்தம் தலைதூக்கியது. இந்தத் தவற்றை, சோஷலிசப் பொன் விழாவின்போதே அன்றைய தலைவர் பிரஷ்னேவ் கூறியிருந்தார். உரிமைகள், உழைப்புக்கு ஊற்றுக்கண்ணாக அமைய வேண்டுமேயல்லாது உரிமை உழைப்புக்குத் தடையாக அமைவது பொருந்தாது; கொஞ்சமும் பொருந்தாது. ஆளும் கட்சியினர் என்ற அடிப்படையில் ஏதாவது உரிமை இருக்குமானால் அது உழைப்பதேயாகும். இதனை, சோவியத் மக்கள் மறந்தனர். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். நமது நிலையில் இன்று புத்திக்கொள்முதல் செய்யாவிடில் எதிர்காலம் நம்முடையதல்ல.

இன்ப அன்பு
அடிகளார்
58. திருவள்ளுவர் உலக மனிதர்

இனிய செல்வ,

இன்றுள்ள சூழ்நிலையில் திருவள்ளுவர், திருக்குறளை நினைந்து உணர்ந்து படிக்கும் ஆர்வம் மேலிடுகிறது. இந்த உலகத்தில் பிறந்த "முதல் மனிதர்” திருவள்ளுவரே. நாம் மனிதகுலத் தோற்றத்தின் அடிப்டையில் இவ்வாறு கூறவில்லை. வேறுபாடுகளைக் கடந்த மனிதத் தன்மையோடு விளங்குபவனே மனிதன். ஆம்! மனிதம் பிறக்கிறது; மொழியில்லாமல் பிறக்கிறது; இனம் இல்லாமல் பிறக்கிறது; சமயம் இல்லாமல் பிறக்கிறது. இனிய செல்வ, மொழி, இனம், சமயம் இவையெல்லாம் மனிதன் தோன்றி வளரும்பொழுது சம்பாதிக்கும் கொள்முதல்களேயாம். பிறந்தபின் ஈட்டும் கொள்முதல்கள், இயற்கையாயமைந்த பொதுமையை அழிக்க அனுமதிப்பது என்ன நியாயம்? இனிய செல்வ, புதிய கொள்முதல்களும் ஏன் ஈட்டப்பட்டன? உலக மாந்தரின் உள்ளங்களைப் புரிந்து கொண்டு, உறவு கலந்து பேசி

தி.27.