பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/431

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



419


63. குறிக்கோள் நட்பு

இனிய செல்வ,

மனித வாழ்க்கை மகிழ்வுறும் நிலையில் இயக்கும் உறுப்புக்கள் பலப்பல. இந்த உறுப்புக்கள், உயிர்ப்புள்ள உறுப்புக்கள்! காலந்தோறும் வந்து பொருந்தும் உறுப்புக்கள். இனிய செல்வ, தந்தை, தாய், உடன்பிறந்தார், நண்பன், மனைவி என்றெல்லாம் உள்ள வாழ்க்கையின் பருவநிலை தேவை. இவை அடிப்படையில் வந்து பொருந்தும் உறுப்புக்கள்! இந்த உறுப்புக்களை நெறிப்படுத்தி வளர்க்கும் பாங்குடையது சமூகம்.

இனிய செல்வ, இந்த உறுப்புக்கள் அனைத்திலும் நனி சிறந்தது நட்பேயாம். உயிர்த்தோழன் வழங்கும் ஆற்றலைத் தாய், மனைவி, உடன் பிறந்தார், மக்கள் இவர்களில் எவரும் தர இயலாது. ஆம்! தாயினும் தோழன் காட்டும் பரிவும் தியாகமும் வாழ்க்கையை நரக வேதனைக் காளாக்காமல் காத்து இன்புறும் நிலையினை வழங்கும் தன்மையுடையது. இனிய செல்வ, திருவள்ளுவர் நட்பு பற்றி நிறைய பேசுகிறார். திருக்குறள் காட்டும் நட்புநெறி இன்று எங்கு இருக்கிறது? அழுக்காறும் அவாவும் பலகாலும் பழகிய நட்புறவைக் கெடுத்து விடுகிறது. அச்சமும் பேடிமையும் தியாக உணர்வைப் பொசுக்கி, சுயநல மனிதனாக்கி விடுகிறது.

இனிய செல்வ, நோன்பு என்றால் விரதம்! விரதம் என்றால் உண்ணாமை அல்லது வழக்கம் போல் உண்ணாமை. பல ஆகாரம் உண்ணல் என்பது இன்றைய வழக்கு. ஆனால், பிறர் நலத்துக்காக முயற்சி மேற்கொண்டு வாழும் குறிக்கோளை நோன்பு என்றது புறநானூறு.

"தனக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென வாழுநர்”

என்பது புறநானூறு, நட்புக்குரிய அன்பு, தியாக ஊற்றுக் கண்ணாலேயே வளரும். இழப்பும் துன்பமும் இல்லையேல்