பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/440

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

428

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


67. நாணம் தேவை

இனிய செல்வ,

திருக்குறளுக்கு உள்ள ஒரே பெருமை நாம் வாழும் காலத்தின் உலகத்தையும் திருக்குறளில் பார்க்க முடிகிறது என்பதுதான்! இனிய செல்வ, மானுட வாழ்க்கையின் சிறந்த அணிகலன் நாணம், பரதி, "நாணமும் அச்சமும் தாய்கட்கு வேண்டுமாம்" என்று பாடியுள்ளார். திருக்குறளும் பாரதியும் முரண்படவில்லை. நடைமுறை உலகியலில் முரண்படுகிறது. ஏன்? மனித குலத்தின் தரம் மிகமிகக் குறைந்து வருகிறது. நாணம் மனிதர்க்குத் தேவை! தீயவை எண்ண-செய்ய நாணப்படுதல் மனித வாழ்க்கைக்குத் தேவை. ஆனால், இன்று நாணமுடையோர் யார்? நாணத்தின் விலை என்ன? இன்றைய உலகம் நாணத்தை இழந்து மனம் போனபடியெல்லாம் வாழ்ந்து தன்னைத்தானே வெட்கமின்றி வியந்து போற்றிக் கொள்கிறது! இன்று ஏது நாணம்? இன்று நாணப்படுகிறவர்கள் ஏமாளிகள்; வாழத் தெரியாதவர்கள்; நெறிமுறை பிறழ்ந்த செயல்களே இன்று அங்கீகரிக்கப் பெறுகின்றன! இன்று நல்லவர்கள் இல்லை, சான்றோர்கள் இல்லை! உலகந்தழீஇய நிலையில் இன்று நாணப்படுவோர் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. தப்பித்தவறி நாணப்படுவோர் எவராவது இருந்தால் அவர்களைச் சமூகம் ஏற்காது. ஏற்காதது மட்டுமல்ல, பைத்தியக்காரப் பட்டமும் கட்டும்.

இனிய செல்வ. நாணமின்றி நடப்பது மட்டும் இன்று வளரவில்லை! இன்று வறுமையில் துஞ்சும் மானுடத்தைக் கண்டு நாணி அவர்தம் முன்னேற்றத்திற்கு உரிய நெறி முறைகளை நாடவேண்டும். நாணமும் வெட்கமுமில்லாத வாழ்க்கையிலிருந்து விலகி அறிவறிந்த ஆள்வினையை நாட வேண்டும். இன்று எத்தனை பேர் ஆர்வத்துடன் பொருள் செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்? எங்கும் வேலை