பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/449

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



437


இத்தகுதியோர் வார்த்தைகளுக்கு அஞ்சுவதில் பயன் என்ன? ஒன்றும் இல்லை. மற்றவர் வருத்தத்தில் துன்பத்தில் மகிழ்வது தீயவர்களுக்குப் பொழுதுபோக்கு!

இனிய செல்வ, இவர்களுடைய இன்னாத சொற்களைப்பற்றி அலட்டிக் கொண்டாலும் பயன் இல்லை. என்பதனாலேயே,

"துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச் சொல் நோற்கிற் பவர்"

(159)

என்றார்.

துறவிகளிடம்கூட சாபமிடுதல் போன்ற துன்பம் விளைவிக்கும் செயல்கள் உண்டு. அதனால், துறந்தாரின் தூய்மையுடையார் என்றார்.

இனிய செல்வ, திருக்குறள் கூறும் பொறையுடைமை எண்ணத்தக்கது. இன்னாதன கூறுவார் மாட்டுப் பொறையுடைமை வேண்டும். அதேபோழ்து நமது வாழ்வை ஆக்கிக்கொள்ள வேண்டும். வாழ்க்கையைப் பொருளுடையதாக்குக நிலம் போல என்றார்.

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”

(151)

ஆதலால், பொறையுடைமை என்பது அழுவதும் அல்ல; அழிவதும் அல்ல. பயனற்ற சின்ன மனிதரிடம் சண்டை போடாதே! ஒதுங்கி வாழ்க! ஆற்றலுடன் வாழ்க! சீறுவோர்ச் சீறுக! ரெளத்திரம் பழகுக! இனிய செல்வ, இது ஒரு ஆலோசனை!

இன்ப அன்பு
அடிகளார்
71. இரண்டு சக்கரங்கள்

இனிய செல்வ,

இன்று உலக முழுவதும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா