பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/452

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

440

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்”

என்று கூறியது.

முறை செய்தலாவது தன் ஆட்சிக்குட்பட்ட அனைவரையும், மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து நலம் செய்ய வேண்டும். யார்மாட்டும் வெறுப்புக் காட்டக் கூடாது; விருப்பமும் காட்டக்கூடாது. ஆட்சிக்கு அடிப்படை ஆள்பவர்களின் விருப்பங்களும் அல்ல; வெறுப்புகளும் அல்ல, "முறை”கள்தான்!

அரசு, தம் மக்களைக் காப்பாற்றுதல் என்றால் என்ன பொருள்? பகைமைகளிலிருந்தும் பாதுகாப்பது என்றுதான் பொருள். உழைப்பாளர்கள் உற்பத்தி செய்து பொருளைக் குவிக்கின்றனர். ஆயினும் அவர்கள் வாழ்க்கையில் செழிப்பு இல்லை! நாளுக்குநாள் வறுமைக்கோடு வளர்கிறது! இந்தச் சுரண்டல்முறைப் பொருளாதாரத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவது வழிவழி வளர்ந்து வந்துள்ள அறநெறிமுறை! இந்த முறையை அரசுகள் தவறாது காப்பாற்ற இது வேண்டும்!

மக்களுக்குள் பகைமை வருவது இயல்பு. ஆனாலும், ஒருவன் தன் பகைவனை அழிக்க அரசு இடம்கொடுக்காமல் காப்பாற்றவேண்டும். அதுதான் முறை!

இனிய செல்வ, இந்த முறை சார்ந்த அரசுகளாலேயே மக்களைக் காப்பாற்ற இயலும்!

இன்ப அன்பு
அடிகளார்
72. விருதுபெறும் வித்தகர்

இனிய செல்வ,

நமது வள்ளுவர் வழி - இதழாசிரியர் அருமை நண்பர் தே.கண்ணன் அவர்கள் ‘திருவள்ளுவர் விருது' பெற்றிருக்கிறார்; ஆம்! நீ சொல்வது நூற்றுக்கு நூறு சரி!