பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/479

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



467


நாடு உற்பத்தியில் போதிய சுறுசுறுப்புக்காட்டாத நாடு! உற்பத்திப் பொருளின் முடிவும் மற்ற நாடுகளை நோக்க சுமார்! இதனால் கைத்தறித்துணிகளைத் தவிர, எலெக்ட்ரானிக்ஸில் ஒருசில பொருள்களைத் தவிர மற்றவை உலகச் சந்தையில் இடம் பிடிப்பது கடினம். ஆனால், நமது நாட்டுச் சந்தை ஏகபோகமாகப் போய்விடும். நமது பொருள்கள் தேக்க நிலை அடையும்.

இனிய செல்வ, இன்று நமது நாட்டில் உற்பத்தி செய்யப் பெறும் மருந்துகளுக்கு வெளிநாடுகளில் நல்ல சந்தை வாய்ப்பு உண்டு, உலகத்தில் மருந்து உற்பத்தியில் சில சிறியமாற்றங்களைச் செய்து, ஒரே மருந்தைப் பல பெயர்களில் தயாரிப்பார்கள். டங்கல் திட்டம் இதைத் தடை செய்கிறது. ஒரு மருந்து உற்பத்தியை, விதிமுறைகளை அனுசரித்து அதனுடன் பதிவு செய்து "பேடெண்ட்” பெற்று விட்டால் அதே மாதிரி மருந்தை மற்ற நாடுகள் செய்ய முடியாது.

இனிய செல்வ, உலகப் பொருளாதார ஆதிபத்தியம் உருவாகலாம். டங்கல் திட்டத்தின் மூலம் இம்முறை எளிதில் எளியநாடுகளின் வளர்ச்சிக்குத் தடையாக அமையலாம். ஆதலால், நமது நாட்டுமக்கள் தொகையும், நமது நாட்டுத் தொழில் வளர்ச்சியின் மந்தப் போக்கும் அதற்கு மேலாக அண்மைக் காலமாக நமது உற்பத்தி அயல் நாட்டு மூலதனத்தைச் சார்ந்திருப்பதும் சிந்திக்க வைக்கின்றன. வட்டிச்சுமை வேறு, உலகில் தூங்காதது இரண்டே இரண்டு. ஒன்று காலம். பிறிதொன்று வட்டி. இனிய செல்வ, இந்தச் சூழ்நிலைகளை யெல்லாம் நினைவில் கொண்டு பார்த்தால் திட்டம் எவ்வளவு நல்லதானாலும் நமது நிலை ஏற்புடையதாக இல்லை. இனிய செல்வ, அண்டை அயல்நாடுகளைப் போல் தற்சார்பான தொழில் முயற்சி. கடின உழைப்பு, ஆகியவற்றை நமது நாட்டு மக்கள் பெற்றாலன்றி வாழ்தல் அரிது. நமக்கு முன்னுதாரணமாக விளங்கியது ஜப்பான்