பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/492

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

480

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நுண்மாண் நுழைபுலம் வேண்டாமா? அறிவும் நுழைபுலமும் வழங்கும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் நாற்காலிகளைத் தரும் முயற்சி போதிய பயனைத்தருமா? பின் தங்கிய நிலைதான் மாறுமா?

இந்த ஆண்டும் மேல்நிலைப் பள்ளித் தேர்ச்சிகளை நீ கூர்ந்து படித்திருந்தால் ஒன்றை உணர்ந்திருப்பாய்! அதாவது 80 விழுக்காட்டுக்கும் மேலாக நகர்ப்புற மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிராமப்புற மாணவர்கள் போதிய அளவு தேர்ச்சி பெறவில்லை. அதிலும் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவு. இந்த நிலை தரும் படிப்பினை என்ன? கல்வியின் தரத்தைக் குறிப்பாக ஆரம்பக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தித் தரமாகக் கல்வியும் பயிற்சியும் தந்தால் பின்தங்கிய நிலை மாறும். நமது பிள்ளைகள் மேட்டுக் குடியினரின் பிள்ளைகளை விடப் புத்திசாலிகள் தான்! ஆனால் அவர்களுக்கு வாய்ப்புதான் வழங்கப்படவில்லை.

இனிய செல்வ, மேலும் ‘பின்தங்கிய நிலை’ என்பது ஒட்டு மொத்தமாக ஒரு சமூகமே பின் தங்கியிருக்காது. அது போலவே முன்னேறிய நிலை என்பதும் ஒரு சமூகம் முழுதுக்கும் பொருந்தாது. தாழ்த்தப்பட்ட சமூகத்தில்தான் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட நிலையும் பின்னடைவும் இருக்கும். தாழ்த்தப்பட்ட சமூகத்திலும் கூடத் தீண்டாமை கடுமையாக இருந்த காலத்தில் டாக்டர் அம்பேத்கார் தோன்றினார் என்பது நினைவுக்குரியது. அது போலவே முன்னேறிய சமூகத்திலும் அனைவரும் முன்னேறியவர்கள் அல்ல; இருக்கவும் முடியாது. இனிய செல்வ, தமிழ் நாட்டிலேயே பழைய சாமான் விற்பனைக் கடைகள் செட்டி நாட்டில்தான் அதிகம். நகரத்தார்கள் குடும்பங்களில் பலர் வீட்டை இடித்து விற்றுப் பிழைப்பு நடத்துகின்றனர். வீட்டில் உள்ள பழைய தட்டுமுட்டுச் சாமான்களை விற்றுப் பிழைப்பு நடத்துகின்றனர். தமிழ் நாட்டில் தொழில் மேதைகளும்,