பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/505

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



493


இல்லாமலா? இல்லை! உலகத்தின் எந்த இனத்தையும் விட இந்தியர்களுக்கு வீரம் அதிகம் உண்டு; விவேகமும் உண்டு. ஆயினும் ஒருவர் பிறிதொருவருடைய வீரத்தை, விவேகத்தை அங்கீகரிப்பதில்லை. ஏன் ? சாதிகளே காரணம்; மத வேற்றுமைகளே காரணம்.

(2)

இனிய செல்வ, இந்தச் சாதிப்புன்மைகள் பழமையானவையும் அல்ல. சமயங்கள் பெற்றெடுத்த நச்சுக் குழந்தைகளுமல்ல. நிலப் பிரபுத்துவமும் தனியுடைமையும் பெற்றெடுத்தவை. இவற்றைப் பின்னால் அங்கீகரித்துப் பாதுகாத்தன சமய நெறிகள். இனிய செல்வ, தொன்மைக் காலத்து மகரிஷிகளின் வாழ்க்கையில்-திருமண உறவில் கூடச் சாதிகள் இருந்ததில்லை. இன்று இந்தச் சாதிகள் வளர்ந்து மனித சமுதாயத்தை ஆட்டிப்படைக்கின்றன. பல தலைமுறைகளாகத் தாழ்த்தப்பட்டவர்களாக வாழும் - வாழ்ந்து கொண்டிருக்கிற ஆதி திராவிடர்களும் இன்னமும் மற்ற சாதியினரின் அங்கீாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் சலிப்படைந்து சமுதாயத்திற்கு எதிர் விளைவு சக்திகளாக உருமாற்றம் பெற்று வருகிறார்கள். இதனை இந்திய சமூகம் அறிந்து, உணர்ந்து ஆதி திராவிடர் சமூகத்தை அங்கீகரிக்க முன்வர வேண்டும். இனிய செல்வ, ஆதி திராவிடர் சமூகமும் தனித்து நிற்பதால் தீண்டாமை போய் விடாது. காவிரி கடலில் கலந்தால்தான் காவிரி கடலாகும். உப்பு, உணவில் கலந்தால்தான் உணவுக்கு ருசி. அதுபோல, ஆதி திராவிட சமூகமும் மற்ற சமூகங்களும் கலக்க வேண்டும். ஒன்றாக சங்கமிக்க வேண்டும். அப்போதுதான் வேற்றுமைகள் அகலும். ஒருமைப்பாடு தோன்றும்!

இனிய செல்வ, இன்று சாதிகளாலும் மதங்களாலும் நோய்வாய்ப்பட்டுள்ள இந்திய சமுதாயத்திற்கு வள்ளுவமே மருந்து! "பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்” என்ற பெருநெறி