பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/506

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

494

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நின்று ஒழுக வேண்டும் இனிய செல்வ, உலகத்திற்குத் தமிழ் கூறும் நல்லுலகம் தந்த நெறிகள் பலப்பல, அவற்றில்,

"பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”

என்பது.

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்”

என்பது.

"பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!”

என்பது.

"எல்லாரும் இன்புற்று இருக்க
நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்றறியேன்”

என்பது. இந்த நெறிகள் மானுடத்தின் ஒழுகலாறாகும் பொழுதுதான் மானுடம் வெல்லும்; வையகம் வளரும்.

இனிய செல்வ, இன்று தமிழகம் திருக்குறள் நெறியிலிருந்து நெடுந்தொலைவிற்கு விலகிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் திருக்குறள் தமிழகத்தை வென்றெடுக்குமா? அல்லது திருவள்ளுவரும் திருக்குறளும் வழிபாட்டுப் பொருள்களாக்கப் படுவார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இனிய செல்வ, நமக்கும் உழுதசால் வழிச் செல்லும் பழக்கம் இருக்கிறது போலும்! 'காலம்’-மனிதனை உருவாக்கும் சாதனமே. ‘காலம்’ மனிதனை உருவாக்குவதில் பங்கேற்கலாம்; பொறுப்பேற்க முடியாது. காலத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் இடையில் நடக்கும் போராட்டமே வாழ்க்கை! இந்தப்போராட்டத்தில் மனிதனைக் காலம் வெற்றிகொண்டுவிட்டால் காலம் மனிதனின் முதுகில் மூப்பு, முதுமை என்ற முத்திரைகளைக் குத்திச் சுடுகாட்டுக்கு அனுப்பி விடுகிறது. மனிதன் காலத்தை வெற்றி கொள்