பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/510

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

498

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இனிய செல்வ, இயலும்! முக்காலும் இயலும்! தேவை, மனிதத்துக்கு-உறவுக்கு முதன்மையான இடத்தைக் கொடுத்தல்; மற்றெல்லாம் இரண்டாம் நிலையின என்று கருதுதல்; தன் விருப்பத்தைத் திணிக்காது மற்றவர் விருப்பத்தை மதித்தல்; அந்த விருப்பத்திற்கு இடையூறின்றி வாழ்தல்; ஒரோவழி மாறுபாடுகள் தோன்றின் உடல் நோய்க்கு மருத்துவம் போல மருத்துவப் பாங்கில் அணுகுதல்; மாறுபாடுகளை அகற்றுதல்; மாறுபாடுகளை அகற்றிக் கொள்ளுதல். இந்தப் பண்பு விட்டுக் கொடுத்தல் ஆகாது. ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் அறிவியல் சார்ந்த முடிவாகும்.

இந்த முடிவும் இந்த முடிநிலை சார்ந்த வாழ்க்கை முறையும் தோன்றினால் சிறியோரை இகழமாட்டார்கள்; யாரையும் அந்நியப்படுத்தமாட்டார்கள். மற்றெவரையும் விடத் தம்மை உயர்ந்தவராகக் கருதிக் கொள்ளமாட்டார்கள். தனிச் சலுகைகள் எதிர்பார்க்கமாட்டார்கள். மற்றவர் உரிமைக்குக் காவலராக வாழ்வர். இவர்களுக்குள் "உதவி இல்லை; ஒப்புரவு உண்டு”. இனிய செல்வ, ஒப்புரவு ஓர் உயர்ந்த வாழ்க்கைமுறை. ஒப்புரவு வாழ்க்கை நிலை மலரும் பொழுதான் ‘கொடுப்பாரும் கொள்வாரும் இல்லா’ச்சமுதாயம் தோன்றும். விருப்பங்கள் உண்டு. விருப்பங்கள் வழிப்பட்ட ஆர்வம் உண்டு. ஆர்வம், ஆளுமை மிக்க முயற்சியைத் தரும். ஆக்கங்கள் படைக்கப் பெறும். இந்த வாழ்க்கைமுறை தவத்தினும் உயர்ந்தது.

இன்று கூடி வாழ விரும்புவோர் சிலரே. ஆயினும் உளமார அந்நிய உணர்வேயின்றிக் கூடி வாழ்வோர் மிகமிகச் சிலரே! அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அற்ப விஷயங்களுக்கெல்லாம் கோபம், பிரிவினை, அந்நியப்படுதல், தீமை செய்தல், தூற்றுதல், வழக்குகள், நியாமான-தனக்குத் தீங்கில்லாத உரிமைகளைக்கூட மறுத்தல், தன்னை வியந்து கொள்ளல், தன்னை உயர்த்திக் கொள்ளல், தனக்கு ஒத்துவரக் கூடியவையே நியாயங்கள் என்று நம்புதல், தனக்கு