பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/518

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

506

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எடுத்துப்படிக்க வேண்டும். இதுதான் சிறந்த நடைமுறை. இந்தியா உருவாவதற்குரிய நடைமுறை.

இனிய செல்வ, உலகத் தமிழ்ச் சங்கம் என்பது ஒன்று இப்போது அவசியமா? தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்ச்சங்கம் செய்யக்கூடிய பணிகளைச் செய்யலாம்; செய்யக்கூடும். புதிய புதிய நிறுவனங்கள் தோன்றுவதைவிட இருக்கும் அமைப்புகளை வலிமைப்படுத்துவதும் அதன் பணிகளை விரிவடையச் செய்வதும் நல்லது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்குத் தமிழ் ஆய்வு, தமிழ் மொழி பெயர்ப்பு ஆகிய பணிகளைச் செய்வதற்குரிய கருவிகள், அமைப்புக்கள் அனைத்தும் இப்போதே அமைந்துள்ளன. சில கோடி ரூபாய் செலவு செய்தாலே போதும்! சங்கம் என்பதை விடப் பல்கலைக்கழக அமைப்புக்கே உலகில் வரவேற்புக் கிடைக்கும். பழைய மரபில் அமைந்த சங்கங்கள்தான் காலப்போக்கில் பல்கலைக்கழகங்களாயின. மதுரையில் இன்றும் நான்காம் தமிழ்ச் சங்கம் ஒன்று செயற்படுகிறது; தமிழ்க் கல்லூரி ஒன்று நடத்துகிறது. இனிய செல்வ, அவசியம் எனில் இத்தமிழ்ச் சங்கத்தினைப் பழைய மரபுப்படி அமைந்தது என்று உதவி செய்யலாம். இன்று தமிழ்நாட்டில் பல தமிழ்ச் சங்கங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. ஆதலால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தையே வளர்த்தால் அதிகப் பயன்தரும்.

தமிழினத்திற்கு எழுச்சியும் விழிப்புணர்வும் தர உலகத் தமிழ் மாநாடு நடத்திய மாண்பமைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் பிறமொழி இலக்கியங்கள், அறிவியல் நூல்கள் உடனுக்குடன் தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டுத் தரவேண்டும். தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளில் மொழி பெயர்த்து