பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இறந்தார்போலன்றி அவர் மாட்டுப் பகை, பாவம், அச்சம் முதலியனவும் நின்று வருத்தும். பிறன்மனை விழையாமையே அறநெறி, பேராண்மை என்றும், அவரையே நல்லோர் என்றும் பாராட்டவும் செய்கிறார் திருவள்ளுவர். ஆதலால் பிறனில் விழையாமைக்குரிய செயல் முறைகளைக் காண்போம்.

பிறனுக்கு வாழ்க்கைத் துணை நலமாய் அமைந்த பெண்களைத் தாய்போலவும், தமக்கைபோலவும், தங்கை போலவும் எண்ணுதல் வேண்டும்.

ஒருவர் வீட்டிற்குச் செல்லும்பொழுது அவ்வீட்டிற் குரிய குடும்பத்தலைவனும், தலைவியும் இருக்கும் நேரம் அறிந்தே செல்லவேண்டும். குடும்பத்தலைவி தனித்திருக்கும் போது செல்லுதல் கூடாது. தனித்த நிலையில் உரை யாடுதலும் கூடாது.

அதுபோல், தன்னுடைய வாழ்க்கைத் துணையை அழைத்துக் கொண்டன்றித் தான் வெளியில் செல்லுதலும் மற்றவர் வீட்டுக்குச் செல்லுதலும் கூடாது.

நெடிய நாள்கள் தன் வாழ்க்கைத் துணைநலத்தைப் பிரிந்திருத்தலும் கூடாது. ஒரோ வழி வாழ்க்கைத் துணை நலத்தைப் பிரிய நேரிடும்பொழுது வாளா சோம்பி இல்லாமல் சுறுசுறுப்பாக நற்பணிகளில் ஈடுபடுதல் வேண்டும்.

16. பொறையுடைமை

(பொறையுடைமை என்பது, பொறுத்தாற்றுதல் என்பதாகும். அறிந்தோ, அறியாமலோ பிறர் தமக்குச் செய்த தீமைகளை மனம் ஒப்பித் தாங்கிக் கொள்வதோடன்றி, அவர்க்குத் திரும்பத் தீமை செய்யாமை பொறையுடைமை யாகும்)

பொறுத்தாற்றுதல் என்பது தீமை செய்தார்க்குத் திரும்பத் தீமை செய்யாமை. ஆனால் பிறர் செய்யும்