பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாக மற்றவர்க்கும் தீங்கு செய்தலால், பாவத்திற்கும் ஆளாகி நரகத்தில் வீழ்வர். ஆதலால் இம்மை மறுமை நலன்களை விரும்புவோர் அழுக்காற்றினைத் தவிர்த்திடுக.

பொறாமை உடையவனுக்குச் செல்வம் வராது. ஒரோ வழி வந்தாலும் அச்செல்வம் வந்தவழி ஆய்வு செய்யப் பெறும். அது போலவே அழுக்காறு இல்லாத நன்மனம் உடையாருக்குக் கேடும் வருவதில்லை. ஒரோ வழி கேடு வந்தால் இயற்கை நியதிக்கு மாறானது என்பதால் இதுவும் ஆய்வு செய்யப்படும்.

ஒருவர் பெற்றுள்ள ஆக்கம், நலம், புகழ்-இவற்றைப் பார்த்து அழுக்காறு உடையோராக வாழ்ந்தவர், வாழ்க்கையில் பெரியவராய் உயர்ந்ததே இல்லை.

அழுக்காறு இல்லாதவர் ஆக்கம் பெற்று உயர்வது உண்மை. இதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆதலால் பெருமையும், ஆக்கமும் வேண்டுவோர் அழுக்காறு கொள்ளற்க. அனைத்துயிர்களும் வாழ்வது கண்டு இன்புறுக.

1. எல்லாரிடத்திலும் அன்பு காட்டவேண்டும்.

2. எல்லாரும் மகிழ்ந்து இன்புற்றுவாழ வாழ்தலே தம்முடைய வாழ்க்கையின் இலட்சியமெனக் கொள்ள வேண்டும்.

3. மற்றவர் வாழ்க்கைக்குத் துணையாய்த் தம்வாழ்க்கை அமையும்பொழுதே தம்வாழ்க்கை இன்பமாக அமையும், என்ற எண்ணத்தைப் பெறுதல் வேண்டும்.

4. பிறந்த மேனியை ஒத்த தன்னல நயப்பினைத் தவிர்த்திடுதல் வேண்டும்.

5. பிறிதொருவர் நலம் வளர்வதிலேயே தன்னலமும் அடங்கி இருக்கின்றது என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும்.