பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



113



3. ஒரே பொருளை இருவர் விரும்புகிறபொழுதும் தோன்றும்.

4. தம் பகைவரை நேரிடையாகச் சந்திக்கும் துணிவு இல்லாத பொழுதும் தோன்றும்.

5. ஒருவரைப் பொய்ம்மையாக வஞ்சக இன்சொல் பேசிப் புகழ்ந்துரைந்து, வாழ விரும்பும்பொழுதும் தோன்றும். சிறப்பாகத் தெளிவு, துணிவு, தறுகண் ஆகிய சிறப்புடைப் பண்புகள் இல்லாதவரிடம் தோன்றும்.

6. ஒருவர் தம்மைவிட மற்றொருவர் செல்வம், புகழ், பெருமை பதவிகள் பெற்றிருப்பதைத் தாங்க மாட்டாமல் அவர் பெற்றிருப்பவை அனைத்தும் தகுதியில்லாத அறமல்லாத நெறிகளில் அடையப்பெற்றவை என்று கூறுதல்.

7. ஒருவர் தம்மைத்தாமே உயர்த்திக்கொள்வதன் காரணமாகவும் புறங்கூறல் இயல்புதோன்றும். அதாவது மற்றவரினும் தாம் உயர்வு என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறபோது, உயர்வுக்குரிய காரணங்கள் இன்மையால் மற்றவர்களின் குற்றங்களைச் சொல்லுதல்மூலம் தம்மை உயர்வுடையவராகக் கருதும் மனப்போக்கு.

8. ஒருவருடைய உயர்வை ஏற்றுப் பாராட்டக்கூடிய பெருந்தன்மை இல்லாமல், தன்னிகழ்வு மனப்பான்மை இருந்தாலும் புறங்கூறல் தோன்றும்.

9. வறுமொழிகளினால் ஆகிய பேச்சரங்கு நடத்தும் பழக்கம் இருந்தாலும் பேச்சுக்குரிய செய்திகள் கிடைக்காத போது புறங்கூறல் தோன்றும்.

தி.IV.8.