பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



115



5. பயனின்றிப் பேசும் பழக்கம் கூடாது.

6. தான் ஒன்றை அடைந்து மகிழ விரும்பினால் அதற்குரிய தகுதியை உழைப்பின்வழியே அடையவேண்டும்.

7. ஒன்றினைக் குறுக்கு வழியில் அடைய முயலுதல் கட்டாது.

8. ஒருவருக்குரியது என்று அறுதியிடப்பட்ட ஒன்றை அவரிடமிருந்து எடுத்துக் கொள்ள முயலுதல் கூடாது.

9. பொதுவாக யாரோடும் பகை கொள்ளாதிருத்தல் நன்று. ஒரோ வழி அறநெறியில் பகை தோன்றி விட்டால் முறையான வலிமை மூலமே வெற்றி கொள்ள வேண்டும். பகைவரின் வலியைவிடத் தன் வலியைக் கூட்டி வெற்றி கொள்ள வேண்டுமே தவிர, பகைவரின் தகுதியை வலிமையை அழித்தல் கூடாது.

10. ஒருவரிடத்தில் தவறுகளைக் காணின் அவரிடத்தில் நேரிலேயே நயம்பட உணரத்தக்க வகையில் தவறுகளை எடுத்துக் காட்டித் திருத்தம் காண வேண்டும். ஒரோவழி குற்றங்கள் எடுத்துக் காட்டப்படும் போது கண்ணோட்டமின்றிக் கடுமையாகக் கூட நேரில் சொல்லலாம். இங்ஙனம் கூறுவதால், மனநோவு வரக்கூடும். குற்றமுடையவருக்கும் பழிப்புவராது. பழகினவருக்கும் தூற்றினார் என்ற பழிவராது.

எந்த வகையாலும் பயத்தின் காரணமாகத் தவற்றை எடுத்துக் காட்ட இயலாதிருப்பின் குற்றமுடையாரின் குற்றம் நிகழும் வாயில்களைக் கண்டு அவர்க்கும் தெரியாமலே அந்த வாயில்களை அடைத்துக் குற்றங்களிலிருந்து விடுதலை பெற உதவி செய்ய முடியும். இதற்கும் வாய்ப்பில்லாது போனால் பழகிய நட்பின் காரணமாகத் திருத்துவதற்குரிய காலம் கருதிக் காத்திருக்க வேண்டும். எந்தக் காரணத்தை