பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தவத்தோராலும் பசியைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் பொருள் கொள்வர்.

தவத்தோர் பசியைப் பொறுத்தல் என்பது தன்னளவிலேயாம். ஈகை அறம் மேற்கொண்டான் தன்னளவில் மட்டுமன்றி, மற்றவர் பசியையும் மாற்றுகின்றான். அதனால் பின்னது சிறப்புடையது.

பசியை அடக்குதல் முதலிய நோன்புகளில் உடம்பை வருத்துவதை விட உடம்பை வருத்திப் பசித் துன்பத்தை நீக்குதல் அறம் என்பதறிக. இந்த அறம் தவத்தினும் சிறந்த தாகும்.

‘அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.’

226

ஒருவன் தான் ஈட்டிய பொருள் வறிதே வீணாகாமல் இம்மைக்கும் மறுமைக்கும் பயன்படக்கூடிய வகையில் சேமித்து வைக்கும் வழி, வறியவரின் கடும்பசியைத் தீர்த்தலே யாம்.

வறுமையுடையோரை அழிக்கும் பசியை நீக்க உதவுதலே ஒருவன் தான் பொருளைப் பத்திரமாகச் சேமித்து வைக்கும் இடம்.

‘பசி’ உயர் குணங்களையும், அறிவையும், ஆற்றலையும் அழிப்பதாலும் ஒரோவழி உயிரையே அழித்தலாலும் ‘அழிபசி’ என்றார்.

"பொருள் வைப்பு" - சேமவைப்பு, பின் தேவைக்கு உதவத் தக்கவகையில் சேமித்துவைக்கும் முறை.

இன்னும், வங்கியில் சேமித்தல் மூலம் பொருள், வட்டியால் பெருகி வளர்ந்து நமக்குத் தேவை ஏற்படும் பொழுது வந்து சேர்கிறது. வங்கிகள், வறுமையுற்றோருக்கு தமது முதலைக் கடனாகக் கொடுத்துத் தொழில் செய்யச் செய்து, வறுமையை மாற்றுகின்றன. இது முதலை இழக்காதது