பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



விண்வெளியில் பறந்து இராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனான் என்று கம்பன் பாடினான்.

ஆனால் நாம் அந்தப் பாட்டுக்குக்கூடப் பதவுரை பொழிப்புரைதான் கண்டோம். இன்னும் இடைக் காலத்தில் சமய உலகு ஒரு தவறு செய்தது.

தவறு என்றுதான் கருதுகிறேன். மற்றவர்களுக்குத் தெரியாதிருந்தால் உடன்பட வேண்டாம். கடவுளுக்கு நிரம்பப் பெருமை தரவேண்டும் என்பதற்காக, இந்த மனிதனை முடமாக்க வேண்டும் என்று இடைக்காலத்திலே சமயம் கொஞ்சம் வேலை செய்தது.

அதாவது, கடவுளுக்குப் பெருமை இருக்க வேண்டு மென்றால் மனிதன் கொஞ்சம் குறை உடையவனாக இருந்தால்தான் நல்லது என்று சமயம் கருதியது.

எனவே, மனிதனிடத்திலே கடவுளால் கொடுக்கப் பெற்ற-அவனுடைய அருளாகக் கிடைக்கப்பெற்ற அறிவைக் கூட அவன் இயக்கி வேலை செய்தால்தான் அது, பயன்தரும். ஆனால் அவனுடைய அறிவை இயங்கச் செய்தவனுக்குப் பெருமை சேர்க்காமல் கடவுளிடம் வரம் வாங்கினான். அதனால் செய்கிறான் என்றவுடன், அதைப் படிக்கின்றவன் கூட கடவுளிடம் சென்று வரம் வாங்க முடியுமா? என்ற எண்ணம் மேலோங்கி அவநம்பிக்கை தோன்றலாயிற்று.

இராவணன் வான் வழியாகப் போனதற்குச் ‘சிவ பெருமானிடம் வாங்கிய வரம்’ என்று ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்கள். இராவணனிடத்திலே இருந்த அறிவு தவறாகப் பயன்பட்டிருக்கலாம்.

அதை விமரிசனம் செய்வது வேறு; ஆனால் அவனிடமிருந்த அறிவை ஒத்துக்கொள்ளுகிற மனப்பான்மை இல்லை. ஆதலினாலே, அதை அந்தத் துறையிலே ஆய்வதற்குப் பதிலாக, அதை ‘வரம்’ என்று போட்டவுடனே, கேட்பவர்கள் வியப்பாகச் “சிவ பெருமானைப் பார்த்து, வரம் வாங்கி