பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



163


நாமாவது, வானில் போவதாவது; முடியாத காரியம்” என்று முடித்துவிட்டார்கள்.

இந்த இரண்டு தலைமுறையை அடுத்துப் பகுத்தறிவுத் தலைமுறை நமது நாட்டில் தோன்றியது. அவர்கள் கொஞ்சம் ஆராய்ந்தார்கள். சிந்தனை செய்யத் தொடங்கினார்கள்.

அவர்களும் அங்கே இருந்த தட்டுமுட்டுப் பாடல்களை வைத்துக்கொண்டு, இது சரியா தவறா என்று ஆராய்ந்தார்களே தவிர, அதிலேயிருந்த அறிவியல் கருத்துக்குரிய பாடலை எடுத்து, “விண்ணிலே பறப்பது எப்படி” என்று ஆராய்ந்து இருந்தால், அவர்கள் முன்னுக்குப் போயிருப்பார்கள்.

அவர்கள் எல்லாப் பாட்டையும் ஒன்றாக ஆக்கி, எதையும் ஆராயாமல், எல்லாம் பொய் என்றும், புளுகு என்றும், மூட்டை கட்டி அவற்றிற்குத் தீ வைக்க வேண்டும் என்றும் சொன்னார்கள்.

ஒருவர் படித்து மகிழ்ந்தார்; இன்னொருவர் செய்யலாமென்றார்; மற்றவர், “ஒன்றும் முடியாது, சிவ பெருமானிடம் வரம் வாங்க வேண்டும்” என்றார்.

இப்படி இருந்தால் தமிழ் எப்படி வளரும்? ஆகையினாலே அதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

இந்திய அரசியல் சட்டம் பற்றி நமக்குத் தெரியும். அது, கிட்டத்தட்ட உலக நாடுகளிலே உள்ள அரசியல் சட்டத்தைப் படித்து, பார்த்து, தொகுக்கப்பட்ட அருமையான சட்டமாகும். அதற்கு நாம் எவ்வளவு பெரிய பெருமை கொடுக்கிறோம் என்பது நமக்குத் தெரியும்.

ஆனால் டாக்டர் அம்பேத்கார் போன்ற பெரிய மேதைகள், அந்த வேலையைச் செய்திருந்தாலும்கூட அவர்களுக்கு ஓர் அடித்தளம் இருந்தது. அமெரிக்க நாட்டு அரசியல் சட்டம் இருந்தது. இங்கிலாந்து நாட்டு அரசியல் சட்டம் இருந்தது. வேறு பல நாடுகளின் அரசியல் சட்டங்கள்