பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விரும்பி நுகர்பவைகள் தேவைகளாக மாறிவிடாமல் தடுக்க, இடையிடையே நோன்புகளின் பெயரால் நுகர்வுகட்கு ஓய்வு தருதல் நல்லது. (85)

தீவினையச்சம் என்ற அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள குறள்கட்கு விளக்கம் கூறவந்த அடிகளார்.

“தீயவினைகள் செய்யாமையை முற்றாகத் தவிர்க்கும் பொழுது ‘ஏமாளி’, ‘கோழை’ என்ற ஏளனப் பேச்சுகள் கிடைக்கும். கவலற்க; இழிவை விரும்பாமை போலவே புகழையும் விரும்பாதிருத்தல் உயர் பண்பாகும். (116)

என்கிறார். இக்கருத்து ஆய்தற்குரியது. பொதுவாகத் தமிழ்ப் பண்பில் சிறந்து நிற்பது ‘இசைபட வாழ்வது’

புகழெனின் உயிரும் கொடுக்குவர்
பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்

என்பது பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதியின் பிரகடனம்.

ஈதல், இசைபட வாழ்தல் அல்லாது உயிருக்குப் பயன் தருவது வேறு இல்லை என்பது வள்ளுவம்.

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறுவித்தாம் மாய்ந்தனரே

என்பார் பெருந்தலைச் சாத்தனார். இந்தப் பின்னணியில் புகழ் விரும்பாமை ஓர் உயர் பண்பு எனக் கூறுவது எந்த அளவுக்கு ஏற்கத்தக்கது என்ற கேள்வி எழக்கூடும்.

வீடும் வேண்டா விறலினர்

என்பதில் வீடு மிகவும் விரும்பத்தக்கது என்றாலும் அதுவும் வேண்டாத வலிமை பாராட்டத்தக்கது என்பது போல, ‘பெரிதும் விரும்பத்தக்க புகழையும் விரும்பாமை’ என்று பொருள் கொள்ளலாம். ஆனால் அடிகளார் உரைகேட்கும் சாமானியக் குடிமகனுக்கு இவ்வறிவுரை எந்த அளவு பொருந்தும் என்ற கேள்வியும் எண்ணப்பட வேண்டும்.

அடிகளார் அவர்களே ‘புகழ்’ என்ற தலைப்பின் கீழ் தொடங்கும் பகுதியில் (134) புகழ்பட வாழ வேண்டிய தேவையை ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் வலியுறுத்தி இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இன்றைய வாழ்வில் துறவு வேடம் பூண்டு சமுதாயத்தில் நடமாடும் துறவிகளின் நடைமுறை அடிகளாருக்கு ஏற்புடைத்தாக இல்லை. அதைப் பற்றி மனம் நொந்து பின்வருமாறு கூறுகிறார்:

துறவுக்குப் புகழ் உரிய தன்று. துறவு, புகழ் பழிகளைக் கடந்தது. ஆனால் இன்றோ இல்லறத்தாரை விடத் துறவிகளே புகழ் வேட்டையாடுகின்றனர். துறவி களிடத்தில் புகழ் வேட்டை தலையெடுத்ததுடன் விளம்பர மன நிலையும் பொய்யும் நடிப்பும் மிகுந்து வளர்ந்து வருகின்றன. (134)

இந்நிலையைப் புகழ் தேடுவது என்பதை விட, பின்னர் குறிப்பிட்டிருப்பது போல ‘விளம்பர வேட்கை’ என்று கூறுவது பொருந்தும். மற்றவர்கள் கூறத் தயங்கும், கூற அஞ்சும் சில