பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


2000 ஆண்டுகளுக்கு முன் விரிந்த, பரந்த ஒரு பேரரசுக்கு அடித்தளமிடுகிறார்.

முடியாட்சி எங்கு பார்த்தாலும் கோலோச்சுகின்ற காலத்தில், அரசன் தெய்விக உரிமையுடையவன் என்பது உலக நாடுகளின் கருத்தாக இருந்தது.

இங்கிலாந்து நாட்டுச் சரித்திரத்திலும், மற்ற நாட்டுச் சரித்திரத்திலும், இதற்காகவே மனிதர்கள் போராடியிருக்கிறார்கள்.

அரசன் தெய்விக உரிமையுடையவன். அவன் தெய்வத்தினாலே அதிகாரத்தைப் பெற்றிருக்கிறான். அவன் தவறே செய்யமாட்டான். அரசன் தவறு செய்வான் என்று கருதுவதே பாபம். இது நாம் இன்றைக்குப் பெரிதாகப் பாராட்டுகின்ற ஆங்கிலேயரின் கருத்து; ஆங்கில நாட்டினுடைய நாகரிகம்.

நமக்கு மொழியின்மீது வேண்டுமானால் பற்று இருக்கலாம். மொழியை ஒட்டியிருக்கின்ற கருத்திலே நமக்கு ஒன்றும் பற்று வாராது என்று நினைக்கிறேன். இது நாட்டினுடைய மரபு.

ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாட்டில் நல்ல முடியாட்சி இருக்கின்ற காலத்தில் திருவள்ளுவர், முடியாட்சியிலே குடியாட்சி தழுவிய ஒரு மரபை நினைவு படுத்துகிறார்.

‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்(கு)
இறையென்று வைக்கப் படும்.’

388

என்றார்.

அரசனுக்குச் சொல்லுகின்றபோது இலக்கணம் சொல்லுகின்றார். நீ அரசு கட்டிலே வந்ததினால் அரசு அல்ல; உனக்கு வழி வழியினாலோ, வேறு காரணத்தில் வந்ததினாலோ அரசு அல்ல. நீ முறை செய்து