பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



169



அவர் இன்பத்துப்பாலிலே, தலைமகன் ஒருவன் தலைவியைப் பிரிந்து, பொருளீட்டும் பொருட்டுச் சென்றிருந்தவன், மீண்டும் வந்து தலைவியைப் பார்த்த போது, “நான் பிரிந்திருந்தபொழுது உன்னை நினைத்துப் பார்த்தேன்” என்று தலைவியிடத்திலே சொன்னவுடன், தலைவி அழுகிறாள். சொல்லுகின்ற ஆளுக்குத் திண்டாட்டமாகப் போய்விடுகின்றது. என்ன சொல்வது என்பது தெரியவில்லை!

‘பிரிந்த நேரத்திலே உன்மேல் கொண்டுள்ள பாசத்தால் உன்னை நினைத்துப் பார்த்தேன் என்று சொன்னேன். இதற்குப்போய் அழுகிறாயே?” என்றுதான் கவலைப்பட்டுச் சொல்கிறான்.

அவள் சொல்லுகிறாள்: ‘நீங்கள் நினைத்துப் பார்த்தீர்கள் என்றால் என்னை மறந்துதானே நினைத்தீர்கள். அப்பொழுது நீங்கள், என்னை ஒருபொழுது மறந்து விட்டீர்கள் என்றுதானே அர்த்தம்’ என்கிறாள்.

இறைவன் நினைந்து ஊட்டுகிறதாயென்றால், அப்பொழுது இறைவன் ஒருபொழுது உயிர்களை மறந்தானோ என்ற கேள்வி வருகிறது. ஆனால், உயிர்களை இறைவன் எப்பொழுதும் மறப்பதே இல்லையென்பதை,

{{block_center|

‘நினைந்தூட்டும் தாயினும்
சாலப் பரிந்து’}}

என்று சொல்லுகிறார்.

நமது செந்தமிழ்க் குமரகுருபர அடிகள் இதற்கு ஓர் அழகான உவமை சொன்னார்.

நம்முடைய தில்லையம்பலவாணனுடைய திரு மேனியைப் பார்த்தால் அவனுக்குப் பக்கலில் நமது சிவகாமி அம்மை, பெருமானின் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பது போல அந்த மூர்த்தி வைக்கப்பட்டிருப்பதை