பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



171


வினை போகும் என்று சொல்லுகிறார்கள். சரி, நாம் எல்லாம் அணிகிறோம்.

சிவபெருமானும் அணிந்திருக்கிறானே?

அப்படியென்றால் சிவனுக்கு ஏதாவது வினையுண்டா? என்று கேட்பது போல மாணிக்கவாசகர் கேட்கிறார்.

சிவனுக்கு வினை இல்லை!

‘தொழுதெழுவார் வினைவளம்
நீறெழ நீறு அம்பவவன்’

மற்றவர்கள் நோய் நீங்க வேண்டும் என்பதற்காக அவன் நீறு அணிகின்றான்.

புறநானூற்றுக் கவிஞன் சொல்லுகிறான், குழந்தைகளைத் தாய் காப்பாற்றுவது போல, குடிமக்களைக் காப்பாற்றுவது மன்னன் கடமை என்று.

திருவள்ளுவர் இதை ரொம்ப அழகாகக் கூறுகிறார்.

‘குடிதழீஇ கோலோச்சும் மாநில மன்னன்’

என்றார்.

தழுவப்படுகின்ற பொருள் எப்படியும் நம்மிலும் உயர்ந்தது என்று நாம் கருதவேண்டும். சில சமயம் நம்மிலும் தாழ்ந்ததையும் தழுவுவது உண்டு. ஆனால் இங்கே நம்மை விட உயர்வரம்பாக இருக்கின்ற அதிகார வரம்புடைய-ஆட்சிப் பொறுப்புடைய ஒரு அரசு குடி மக்களைத் தழுவுகிறது என்று சொன்னால், அங்கே குடிமக்களுக்குரிய தரத்தை, தகுதியை, பெருமையை, உரிமையைத் திருவள்ளுவர் பெரிதுபடுத்துகிறார்.

‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.’

(544)

என்றார்.