பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கருத்துகளை அடிகளார் அவர் தம் மனச் சான்றிற்குப் பணிந்து துணிவாகவே சமுதாயத்தின் முன் வைத்திருக்கிறார்.

திருவள்ளுவர் காட்டும் அரசு பற்றிய அத்தியாயம் மிகச் சிறப்பான ஒன்று. ஆழமான கருத்துகளைக் கொண்டது. திருவள்ளுவர் பேசுவது மன்னர் ஆட்சி பற்றியே என்றாலும் ஒரு குடியாட்சிக்கு வேண்டிய உயர் பண்புகள் அனைத்தும் கொண்ட கூறுபாடுகளுடைய ஆட்சியை வள்ளுவர் படம் பிடிக்கிறார் என்பதைத் தெளிவாக விளக்குகிறார்.


செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு

என்ற குறளுக்கு,

நீ அரசை நீண்ட நாட்களுக்கு நடத்த வேண்டு மென்றால் தரம் குறைந்த வார்த்தைகளினாலே செவிக்குக் கேட்கும் படியாகச் சொன்னால் கூடக் கவலைப் படாதே (194)

என அடிகளார் உரை கூறியிருக்கிறார். இது இந்தக் குறளுக்கு மற்ற உரையாசிரியர்கள் கூறியிருக்கும் கருத்தில் இருந்து மாறுபடுகிறது. தனது ஆட்சியைப் பற்றி அரசன் தனது அமைச்சர் போன்றார் கூறும் கசப்பான விமர்சனங்களைப் பொறுத்துக் கொண்டு கேட்கும் பண்புடையவன் என்பதே பொதுவாகக் கூறப்படும் பொருள். அடிகளார் கூட இதே பொருளில்தான் இக்குறளை ஒரு முறைக்கு மேலாக மேற்கோள் காட்டுகிறார். ஆனால் இங்கு கூறியுள்ள விளக்கம் மட்டும் சற்று மாறுபடுகிறது. இது ஆய்வுக் குரியது.

உலகின் அன்றாட வாழ்க்கையில் நாம், ‘வினை’ என்ற சொல்லை ‘விதி’ என்று தொனிக்கும் வகையில் ‘அது அவனவன் வினை’ என்று கூறுகிறோம். இங்கு அடிகளார் ஒரு கருத்தைத் தெளிவாக எடுத்து வைக்கிறார்.

‘மீண்டும், மீண்டும் கூறுகிறேன். ஒன்றைத் தயவு செய்து மறந்து விடக்கூடாது. வினை, விதி என்று சொன்னால் ஏதோ நமது மூளையிலே ஒரு பயங்கரமான பீதி உண்டாக்கி இருக்கிறார்களே, அது போன்ற ஒரு பீதியை நாம் கொள்ளக் கூடாது. ‘வினை’ என்றாலே ‘செயல்’ என்றுதான் பொருள். ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ என்று தமிழ் இலக்கியம் பேசும். ஓர் ஆண் மகன் என்று சொன்னால் செயல் செய்வதுதான் அவனுக்கு இயற்கை செய்வது தான் அவனது உயிரியற்கை. செய்யாமல் இருந்தால்தான் தவறு. எனவே செயல்கள் செய்யாமல் சோம்பி இருப்பது வாழ்க்கையன்று. (207)

வாழ்க்கையின் இன்றையச் சாதனைகள், முன்னேற்றங்கள் அனைத்திற்கும் மனித முயற்சிதான் காரணம். எனவே வள்ளுவர் மனித முயற்சியைப் பலபடப் பாராட்டுகிறார். முயற்சி, ஊழையும் புறங்காணும் என்கிறார். அவனன்றி ஓரணுவும் அசையாது என்று நம்பும் சமயஉலகின் தலைமகன் ஆயினும் அடிகளார் முயற்சியின் மாண்பு பேசுவதில், மகத்துவம் கூறுவதில் வள்ளுவரொடு முழுமையாக ஒன்றிவிடுகிறார்.

சிறந்த முறையில் எண்ணி ஊக்கத்தோடு செயல்பட்டால் காரியம் கை கூடினாலும், கூடாது போனாலும் அந்த எண்ணத்திற்கும்