பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தேசபக்தியோடு கொண்டுபோய் அங்கு நின்று கொடுப்பது இல்லை.

நாம் 2 லட்ச ரூபாய் அல்லது கோடி ரூபாய் வசூல் செய்தால் அதில் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவாகும்போல் தெரிகிறது. அதிலே இருக்கின்ற முயற்சிகளைப் பார்த்தால் ஐந்து லட்ச ரூபாய் செலவுமட்டு மல்லாமல், அந்த ஒரு மாதத்தில் அந்த அலுவலர்கள் செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் விடுபட்டு, ‘அது ஏன் வரவில்லை’ என்று கேட்டால், ‘அது அந்த வேலையாகப் போய்விட்டது, இனிமேல்தான் எடுக்கவேண்டும் என அலுவலர்கள் கூற நேரிடும்.

அரசுக்குரிய கடன்களை-அரசுக்குத் தேவையான பொருட்களை, ‘இறை ஒருங்கு நேரவேண்டும்’ என்று சொன்னார்.

இது எப்படியாவது வரி விதிக்கப்படுகின்ற முறை. ஆனால் நிரந்தரமான வரி என்ன இருந்தது அரசுக்கு?

‘உறுபொருள் உல்கு பொருள்’

என்று இரண்டு பொருள் சொல்கிறார்.

‘உறுபொருள்’ என்பதற்கு உரை ஆசிரியர்களே பல இடங்களில் மாறுபடுகிறார்கள்.

பரிமேலழகர் புதையல் என்று பொருள் செய்கிறார். நிலத்திற்குள்ளாக யாருக்கும் உரிமை இல்லாமல் கிடைக்கின்ற புதையல் உறுபொருள். தன்னிச்சையாகக் கிடைக்கின்ற பொருள் அரசுக்குச் சொந்தம்தான்.

இதுவரையில் அது அரசுக்குச் சொந்தம்தான்.

இப்பொழுதும்கூட நமக்குப் பூமிக்குள் இருந்து தங்கப் பாறை கிடைக்கிறது என்றாலுங்கூட, அது அரசுக்குத்தான் சொந்தமே தவிர நமக்கல்ல! அது யார் வீட்டுத் தோட்டத்தில் இருக்கிறதோ அவருக்குச் சொந்தமல்ல. ஆனால், ‘உறு