பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வணி ஆகிக்கொண்டிருப்பின், அதையே நமது மக்கள் வாங்கிப் பயன்படுத்திக்கொண்டு ஏழையாகப் போய் விடுவார்கள். ஆகவே அப்பொருட்களின் மீது வரியைப் போட்டால், பொருளின் விலை கூடும். விலை கூடினால் வியாபாரம் சுருங்கும். நம் நாட்டிலே செல்வம் செழிக்கும் என்ற கருத்திலே வள்ளுவர் ‘உல்குபொருள்’ அரசுக்குரிய பொருள் என்று சொன்னார்.

பிறகு ‘ஒன்னார்த்தெறும் பொருளும்’ பகைக்குலத்திலே மாற்றாருடன் போராடி அந்த நாட்டில் இருந்து கொண்டு வருகின்ற பொருள்.

இந்தப் புதையல், வாரிசு இல்லாமல் இருக்கும் சொத்துக்கள், வெளிநாட்டில் போராடிக் கொண்டுவரும் பொருட்கள், ஆகிய மூன்றும் அரசுக்குச் சொந்தம் என்கிறார்.

இதற்குப் பிறகு வேண்டியபொழுது விதித்து வாங்குகிற வரிப்பொருள், இதைத் தவிர அரசுக்கு வேறு வரி என்ற அமைப்பு திருவள்ளுவர் குறிப்பிடவில்லை.

ஆனால், தமிழ்நாட்டினுடைய வரலாற்றைப் பார்த்தால், அரசியல் அமைப்பைப் பார்த்தால், நமக்கு ஒரு ஐயப்பாடு தோன்றுகிறது. அது நீண்ட நெடிய அளவுக்கு உரியது.

நிலங்கள், செல்வத்தினுடைய உற்பத்திக் கேந்திரங்கள், இவைகள் எல்லாம் அரசுக்குச் சொந்தமாக இருந்தனவாகத் தெரிகிறதே தவிர, தனி மனிதனுக்குச் சொந்தமாக இருந்தனவாகத் தெரியவில்லை.

காரணம், பாரி முந்நூறு ஊரும் கொடுத்தான். இவ்வளவு ஊரும் கொடுத்தான்ென்றால், இடையிலே கருப்புச் சாமிக்கும், சிவப்புச் சாமிக்கும் அங்கே பட்டா இருந்திருக்குமானால், அவன் எப்படி கொடுத்திருக்க முடியும்?