பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/194

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அது வீட்டு வாழ்க்கை என்று சொல்ல முடியாது. மிகவும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும்.

‘மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்’

அவனுடைய வீட்டிலே நல்ல மனைவி, நல்ல மக்கள், அவனுக்கு உயர்ந்த நண்பர்கள், அவன் நினைத்ததைச் செய்யும் ஏவலர்கள். இப்பொழுது சொன்னதைச் செய்தாலே போதும் என்ற காலம். வேலைக்குச் சேர்க்கும்போதே, நான் சொன்னதைச் செய்தால் போதும், நீயாக ஒன்றும் செய்ய வேண்டாம், என்று சொல்லி வேலையாளைச் சேர்க்கின்ற காலம் இது!

‘வேந்தனும் அல்லவை செய்யான்’

அவன் படுத்தால் நிம்மதியாகத் தூங்க வேண்டும். இதுவும் அரசனது பொறுப்பு.

என்னுடைய கைகளிலே உள்ள பொருட்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வது, போட்டா போட்டிகள் நிறைந்த ஒரு விலங்கு உலகம் ஆகும்.

‘உங்களுடைய கைகளிலே உள்ளவைகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்!’ கோயில்களிலே திருவிழாவிற்குச் சென்றால், அடிக்கடி ஒலி பெருக்கியிலே சொல்லுவார்கள். ‘சங்கிலிகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்! கைகளிலே உள்ள ‘பர்சை’ பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்!’ என்று சொல்லுவார்கள்.

பத்திரப்படுத்துவது யாருடைய பொறுப்பு என்று வள்ளுவர் கருதுகிறார்? ஒருவன் பொருளைத் தமது பொருள் போல் பாதுகாத்துக் கொடுக்கவேண்டும்.

இப்பொழுது நமக்கு அந்த ஒழுக்க இயல்பு இல்லை. வள்ளுவர் நமக்கு அந்தக் குறிப்பைச் சொல்கிறார்.