பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/198

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாற்றினால், திரும்ப அவன் புது மனிதனாக வந்து நல்லது செய்தாலும் செய்யலாம் என்ற நம்பிக்கையோடு அவனுடைய மனதை மாற்றிக்கொடுப்பது என்று தத்துவ நம்பிக்கையோடு கருதுகிறார்கள்.

சிறைக்கு அனுப்புகிறோம் ஒரு மனிதனை. சிறை தண்டனை என்று நம் பிற்கால வழக்கிலே சொல்லுவது கிடையாது.

முற்கால வழக்கிலேதான் இருந்தது சிறை தண்டனை. சிறையிலே அவனுடைய மனத்தை மாற்றுதல்-சூழ்நிலையிலிருந்து அவனுடைய மனத்தை மாற்றுதல்.

ஆனால் இப்பொழுது அந்த முயற்சி பல சிறைக் கூடங்களிலே செய்யப்படுவதில்லை. நியாயமாகப் பார்த்தால், நல்ல மனோதத்துவ நிபுணர்களைச் சிறையில் நியமித்து, தண்டனை பெற்று வந்தவர்கள் ஏன் தவறு செய்கிறார்கள்? எப்படித் திருத்துவது? என்று பார்க்கச் செய்யவேண்டும்.

சில பேரைப் பார்த்தால் தவறு செய்யாமல், உள்ளே இருப்பவர்கள் போல் தெரிகிறது. உள்ளே ஒரு நாளல்ல, ஒரு ஆண்டல்ல, ஆயுள் முழுவதும் இருக்கவேண்டிய ஆளெல்லாங்கூட வெளியே இருந்துகொண்டிருப்பர்.

நமக்கு வித்தியாசமாக இருக்கும். ஆக, திருவள்ளுவர் நினைவுபடுத்துகிறார். குற்றத்தைத்தான் கடிய வேண்டும். குற்றம் நீக்குதல், குற்றத்தைக் கடிதல், வழுவு அன்று; வேந்தன் தொழில் என்றார்.

குற்றங்கடிதல், இப்போது குற்றமுடையான்மீது நமக்கு வெகுளி வந்துவிடுகிறது. சமயத்தில் ஆத்திரத்திலே குற்றத்தின் மீது நமக்கு வெகுளி வரக்கூடாது.

பானையிலே இருக்கின்ற தண்ணீர் நன்றாக இல்லையென்றால், தண்ணீரை ஊற்றலாமே தவிர, பானையை