பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



195


உடைக்கக் கூடாது. அதைத்தான் இளங்கோவடிகள் “கருணை மறவன்” என்று சிறப்பித்தார்.

மனிதனுக்குத் தேவையான ஒழுக்கம் எல்லாவற்றையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நல்ல குணம்கூட இல்லாத ஆள் உலகத்திலேயே கிடையாது. 1330 குறளிலேயும் 80 ஒழுக்க நெறிகள் வள்ளுவர் சொல்லுகிறார். இந்த 80 ஒழுக்க நெறியிலும் 5 குறளாவது தெரியாத மனிதன் இருப்பான் என்ற நம்பிக்கை எனக்குக் கிடையாது.

சில பேர் அன்புடையவராக இருக்கலாம். அழுக்காறு இல்லாதவராக எத்தனையோ பேர் இருக்கலாம். ‘அது சரி, அவன் கொடுத்து வைத்தது, அனுபவிக்கிறான்; நமக்கு எதற்கு அது’ என்று சொல்லுகிற ஆளையும் பார்க்கிறோம். ஆகவே, மனிதனுக்கு ஒரு ஒழுக்கம், இரண்டு ஒழுக்கம் இருப்பதினாலே அவன் முழு மனிதனாக வந்து விடுவதில்லை.

ஒரு செங்கல், இரண்டு செங்கல் மாளிகை ஆகிவிட முடியாது. மனிதனுக்குத் தேவையானவை ஏராளமான உயர் குணங்கள். அவற்றிலே வள்ளுவர் 70, 80 ஒழுக்கங்களை முறைப்படுத்திச் சொல்லுகிறார். இந்த எண்பதிலே, நாற்பதுக்கு மேற்பட்ட ஒழுக்கங்களாவது இருந்தால்தான், மனிதன் முழுமனிதனாக இருக்க முடியும். ஏதாவது கொஞ்சமாவது என்று சொன்னால், மிகச் சுலபமாகத் தப்பித்துக்கொள்வார்கள். ஒருவன், எப்போதுமே சிரித்த முகமாகவே இருக்கிறான்.

‘முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.’

93

அவனது முகம் எப்போதும் சிரித்த முகந்தான். எப்போதும் இனிய சொற்கள்தான் சொல்வதுண்டு. கடுஞ்சொல் சொல்வதே இல்லை. அவன் முறைப்படியான